இந்தியா கூட்டணியின் 3வது ஆலோசனை கூட்டம் நடைபெறும் தேதி அறிவிப்பு
1 min read
Announcement of date of 3rd consultative meeting of India alliance
6/8/2023
இந்தியா கூட்டணியின் 3வது ஆலோசனை கூட்டம் நடைபெறும் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
எதிர்க்கட்சிகள்
பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எதிராக பலம் மிக்க கூட்டணி அமைக்க காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இதற்கான முதல் ஆலோசனைக் கூட்டம் பீகார் தலைநகர் பாட்னாவில் நடந்தது. 2-வது முறையாக பெங்களூருவில் கடந்த 17, 18-ம் தேதிகளில் எதிர்க்கட்சிகள் கூடி மீண்டும் ஆலோசனை நடத்தின. 26 கட்சிகள் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில், எதிர்க்கட்சிகளின் அணிக்கு ‘இந்தியா’ என பெயரிடப்பட்டது. அடுத்தடுத்து கூட்டங்கள் நடத்தி தேர்தல் வியூகங்கள் உள்ளிட்டவற்றை வகுப்பது குறித்து முடிவு செய்யப்பட்டது.
3வது ஆலோசனைக் கூட்டம்
இந்நிலையில், இந்தியா கூட்டணியின் 3வது ஆலோசனை கூட்டம் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில், இம்மாதம் 31ம் தேதி மற்றும் செப்டம்பர் 1ம் தேதி என இரண்டு நாட்கள் நடைபெறும் என அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து ஷிவ் சேனா உத்தவ் பாலசாஹேப் தாக்கரேவின் தலைவர் சஞ்சய் ராவத் கூறுகையில், ” இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் ஆகஸ்ட் 31ம் தேதி மற்றும் செப்டம்பர் 1ம் தேதி மும்பையில் நடைபெறும். கூட்டம் வெற்றிகரமாக நடைபெறும் என்பதை உறுதி செய்கிறோம்” என்றார்.