முதுமலை காப்பகத்தில் ஜனாதிபதி ஆஸ்கர் புகழ் “பொம்மி”க்கு கரும்பு வழங்கினார்
1 min read
At the Mudumalai Conservatory, President Oscar presented a cane to “Bommi” of fame
5.8.2023
ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவி ஏற்ற பிறகு முதன்முறையாக நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள முதுமலை புலிகள் காப்பகத்துக்கு இன்று மாலை வருகை தந்தார்.
நீலிகிரி முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள யானைகளை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பார்வையிட்டார். முகாமில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, ஆஸ்கர் விருது பெற்ற தி எலிபண்ட் விஸ்பரர்ஸ் ஆவணப்படத்தில் நடித்து உலகம் முழுவதும் புகழ் பெற்ற பாகன் தம்பதிகளான பொம்மன், பெள்ளியை நேரில் சந்தித்து பேசினார். மேலும், ஆஸ்கர் விருது வென்ற தி எலிபாண்ட் விஸ்பரர்ஸ் ஆவணப்பட புகழ் ‘பொம்மி’ யானைக்கு கரும்பு வழங்கினார். அதனை தொடர்ந்து முகாமில் உள்ள பாகன்கள் மற்றும் பழங்குடியின மக்கள் மற்றும் தன்னார்வ அமைப்பு பிரதிநிதிகளை சந்தித்து பேசினார்.