இராமநதி கடனாநதி அணைகளில் தண்ணீர் திறப்பு
1 min read
Release of water in Ramnadi Kadananadi dams
5.8.2023
தென்காசி மாவட்டத்தில் கடையம் ஊராட்சி ஒன்றிய பகுதியில் உள்ள இராமநதி, கடனாநதியில் இருந்து கார் பருவ சாகுபடிக்க்கான தண்ணீரை தென்காசி மாவட்ட ஆட்சியர் துரை.இரவிச்சந்திரன் திறந்து வைத்தார்.
தமிழக முதல்வரின் ஆணையின்படி தென்காசி மாவட்டத்தில் கடையம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட இராமநதி, கடனா நதியில் இருந்து கார் பருவ
சாகுபடிக்கு மாவட்ட ஆட்சியர் துரை.இரவிச்சந்திரன் தண்ணீர் திறந்து வைத்தார்.
இராமநதி பாசன திட்டத்தின் கீழுள்ள வடகால், தென்கால் மற்றும் பாப்பான்கால் ஆகிய கால்வாய்களின் கீழ் பாசன வசதி பெறும் 100819 ஏக்கர் நேரடி பாசன நிலங்களுக்கு நடப்பாண்டு கார் பருவ சாகுபடிக்கு இராமநதி நீர்த் தேக்கத்திலிருந்து 04.08.2023 முதல் 16.11.2023 வரை 105 நாட்களுக்கு வினாடிக்கு 60 கன அடி வீதம் பொத்தம் 168.03 மி.க.அடிக்கு மிகாமல் நீர் இருப்பை பொறுத்து தண்ணீர் திறந்து விடப்படும்.
இதகள் மூலம் கடையம், மேலக்கடையம், கோவிந்தப்பேரி, ஆழ்வார்குறிச்சி, வாகைக்குளம், அயன் பொட்டல்புதுார், பொட்டல்புதூர், பாப்பான்குளம் மற்றும் இரவண சமுத்திரம் ஆகிய கிராமங்கள் பயன் பெறும்.
மேலும், கடனா பாசனத் திட்டத்தின் கீழுள்ள அரசபத்துகால், வடகுருபத்துகால், ஆழ்வார்குறிச்சி தென்கால், ஆம்பூர் பெருங்கால், மஞ்சம்புளிகால், காக்கநல்லுார் கால், காங்கேயன்கால் ஆகிய கால்வாய்களின் கீழ் உள்ள 3987-57 ஏக்கர் நேரடிப் பாசன நிலங்களுக்கு நடப்பாண்டு கார் பருவ சாகுபடிக்கு கடனாநதி நீர்த்தேக்கத்திலிருந்து 04.08.2023 முதல் 16112023 வரையிலான 105 நாட்களுக்கு வினாடிக்கு 125 களஅடி வீதம் 664.60 மில்லியன் கனஅடிக்கு மிகாமல் நீர் இருப்பு மற்றும் நீர்வரத்தைப் பொறுத்து தண்ணீர் திறந்து விடப்படும்.
இதன் மூலம் தர்மபுரம்மடம், சிவசைலம், ஆழ்வார்குறிச்சி மேல ஆம்பூர், கீழ ஆம்பூர், மன்னார்கோவில், திருவாலீஸ்வரம், பிரம்மதேசம், பள்ளக்கால், பொதுக்குடி, பனஞ்சாடி
மற்றும் இரங்கசமுத்திரம் ஆகிய கிராமங்கள் பயன் பெறும்.
எதிர் வரும் நாட்களில் தென்மேற்கு பருவ மழையினால் மேலும் அணையில் நீர்வரத்து அதிகரிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் நீர்த்தேக்கத்தில் எதிர் வரும் நாட்களில் பருவமழை பொய்த்து எதிர் பார்க்கின்ற நீர்வரத்து கிடைக்கப் பெறவில்லை என்றால், இருக்கும் நீரை அனுமதிக்கப்பட்ட பாசன நிலங்கள் முழுமைக்கும் பயன்பெறும் வகையில் சுழற்சி முறையில் வழங்கப்படும் எனவும், நீரை சிக்கனமாக பயனபடுத்தவும், நீர்விநியோகப் பணியில் நீர்வளத்துறைக்கு ஒத்துழைப்புத் தருமாறும் மாவட்ட ஆட்சியர்
துரை.இரவிச்சந்திரள் கேட்டு கொண்டுள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் உதவி செயற் பொறியானர் ராஜேந்திரன், உதவி பொறியாளர் கணபதி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) ரா.ராமசுப்பிரமணியன், தென்காசி மாவட்ட பஞ்சாயத்து கூட்டமைப்பின் தலைவரும், கோவிந்தபேரி ஊராட்சி மன்ற தலைவருமான டி.கே. பாண்டியன், மற்றும் ஊராட்சி மன்றத் தலைவர்கள் கீழக்கடையம் பூமிநாத், மந்தியூர் கல்யாண சுந்தரம், இரவணசமுத்திரம் முகம்மது உசேன், கடையம் பெரும்பத்து பொன் ஷீலா, பாப்பான்குளம் முருகன், பொட்டல்புதூர் கணேசன், தருமபுரமடம் ஜன்னத் சதாம், மற்றும் அரசு அலுவர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள், விவசாயிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.