ஆலங்குளத்தில் மின் ஊழியரிடம் ரூ.2 லட்சம் அபேஸ்
1 min read
Abes Rs 2 lakh from an electrical worker in Alankulam
6.8.2023
ஆலங்குளத்தில் மின் ஊழியரின் மோட்டார் சைக்கிள் பெட்டியை உடைத்து ரூ.2 லட்சம் திருடப்பட்டது.
வயர்மேன்
ஆலங்குளம் அருகே உள்ள நல்லூர் பரணிநகரை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது45). இவர் பாளை பெருமாள்புரத்தில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் வயர்மேனாக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி, ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். ரூ. 2 லட்சம் அபேஸ் இவர் ஆலங்குளம் பகுதியில் ஒரு இடம் வாங்க முடிவு செய்தார். இதற்காக நேற்று தனது மனைவியின் நகையை அடகு வைப்பதற்காக ஆலங்குளத்தில் தாலுகா அலுவலகம் அருகே உள்ள ஒரு வங்கிக்கு அவர் சென்றார். அங்கு நகையை அடகு வைத்துவிட்டு ரூ. 2 லட்சம் பணத்தை பெற்றார். பின்னர் அந்த பணத்தை தனது மோட்டார் சைக்கிள் பெட்டியில் வைத்து பூட்டிவிட்டு, ஆலங்குளத்தில் உள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அங்கு மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு உள்ளே சென்றுள்ளார். தொடர்ந்து சக ஊழியர் ஒருவரின் வீட்டுக்கு சென்றுள்ளார். அஙகு வைத்து பெட்டியை திறந்து பார்த்தபோது அவரது பணத்தை காணவில்லை.
சி.சி.டி.வி. காட்சிகள் இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், ஆலங்குளம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிளில் இருந்த பணத்தை திருடி சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர். வெங்கடசேன் பணம் எடுத்து வந்த வங்கி முன்பு பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. காமிராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த வங்கியின் முன்பு சிலர் நின்று கொண்டு பணம் எடுத்து செல்பவர்களை நோட்டமிட்டு திருடிச் செல்லும் சம்பவம் அடிக்கடி நடந்து வருவதாகவும், பொதுமக்கள் மற்றும் வாகன நடமாட்டம் மிகுந்து காணப்படும் இந்த பகுதியில் மேற்கொண்டு திருட்டு சம்பவம் நடைபெறாமல் இருக்க போலீசார் கூடுதல் கவனம் செலுத்த சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.