குத்துக்கல்வலசையில் ரூ.11.50 லட்சத்தில் புதிய தார்ச் சாலை
1 min read
New tarmac at Kuthukalwalasai at Rs.11.50 lakhs
6.8.2023
தென்காசி ஊராட்சி ஒன்றியம் குத்துக்கல் வலசை ஊராட்சி திருநகர் பகுதியில் மாவட்ட ஊராட்சி நிதி மூலம் ரூபாய் 11.50 லட்சம் செலவில் புதிய தார்ச்சாலை அமைக்கும் பணி துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது.
தென்காசி மாவட்டம், தென்காசி ஊராட்சி ஒன்றியம், குத்துக்கல் வலசை ஊராட்சி திருநகர் பகுதியில் தென்காசி மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் ஆயிரப்பேரி
தி. உதயகிருஷ்ணன் நிதிமூலம் ரூபாய் 11.50 லட்சம் செலவில் திருநகர்
2 வது தெருமுதல் 14 வது தெருவரை தார்ச்சாலை அமைக்கும் பணி துவங்கியது.
இந்த நிகழ்ச்சிக்கு குத்துக்கல்வலசை ஊராட்சி மன்ற தலைவர் செ.சத்யராஜ் தலைமை தாங்கினார். குத்துக்கல்வலசை ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் மா.சண்முகசுந்தரம், தென்காசி ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் ஆர்.எம். அழகுசுந்தரம், தென்காசி ஊராட்சி ஒன்றிய பொறியாளர் ஜெகதீஷ் மாதவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குத்துக்கல்வலசை ஊராட்சி செயலாளர் கே.வேம்பையா அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.தென்காசி மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் ஆயிரப்பேரி தி.உதயகிருஷ்ணன் தார் சாலை அமைக்கும் பணியினை துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் , குத்துக்கல்வலசை ஊராட்சி மன்ற உறுப்பினர்கள்
சி.அம்புலி, சு.கண்ணன், சு.இசக்கி தேவி, அ.கலைச்செல்வி, சங்கரம்மாள், மீ.மைதீன்பாத்து, மு.சந்திரா, இ.சரவணன், சி. மல்லிகா, மு.கருப்பசாமி,வே.சுப்பையாமக்கள் நலப் பணியாளர் கே.கணேசன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.முடிவில் குத்துக்கல்வலசை ஊராட்சி மன்றத்தலைவர்
செ.சத்யராஜ் அனைவருக்கும் நன்றி கூறினார்.