மீண்டும் பாராளுமன்றத்தில் ராகுல் காந்தி
1 min read
Rahul Gandhi in Parliament again
7/8/2023
நீதிமன்ற உத்தரவை அடுத்து ராகுல்காந்தி மீண்டும் பாராளுமன்றத்தில் கலந்து கொண்டார். ஆனால் அமளி காரணமாக மக்களவை 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
ராகுல்காந்தி
ராகுல் காந்தியின் இரண்டு ஆண்டு தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்து உத்தரவு இன்று காலை மக்களவை செயலகம் திரும்ப பெற்றது. வயநாடு எம்.பி.-யாக ராகுல் காந்தி தொடர்வார் என அறிவிப்பு உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, ராகுல் காந்தியின் தகுதி நீக்க உத்தரவை இன்று காலை மக்களவை செயலகம் திரும்ப பெற்றது. வயநாடு எம்.பி.-யாக ராகுல் காந்தி தொடர்வார் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து 136 நாட்களுக்கு பிறகு ராகுல் காந்தி மீண்டும் எம்.பி., ஆனார்.
தகுதி நீக்க உத்தரவு திரும்பப் பெறப்பட்ட நிலையில், அவை நடவடிக்கைகளில் பங்கேற்க ராகுல் காந்தி பாராளுமன்றம் வருவதாக காங்கிரஸ் சார்பில தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே இன்று காலை 11 மணிக்கு மக்களவை கூடியதும், முன்னதாக எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக மக்களவை 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது மீண்டும் 12 மணிக்கு அவை தொடங்கியதும், அவையில் பங்கேற்க ராகுல் காந்தி வருகை தந்தார். பாராளுமன்றம் காந்தி சிலை முன் காங்கிரஸ் எம்.பி.க்கள், ராகுல் காந்தி வாழ்க என முழக்கமிட்டு அழைத்து சென்றனர். அதன்பின் ராகுல் காந்தி மக்களவையில் தனது இருக்கையில் சென்று அமர்ந்தார்.
பின்னர் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட மக்களவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.