மினிமம் பேலன்ஸ் இல்லாததால் வங்கிகள் வசூலித்த தொகை- பகீர் தகவல்
1 min read
Amount Charged by Banks for Non-Minimum Balance – Pakhir Information
9.8.2023
வாடிக்கையாளர்களிடம் இருந்து வங்கிகள் வசூலித்துள்ள அபராத தொகை தொடர்பான கேள்விக்கு மாநிலங்களவையில் நிதித்துறை இணை மந்திரி பகவத் காரத் எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார். அதில், பொதுத்துறை வங்கிகள் மற்றும் எச்டிஎப்சி, ஐசிஐசிஐ, ஐடிபிஐ, ஆக்சிஸ், இந்தஸ்இந்த் ஆகிய தனியார் வங்கிகள் கடந்த 2018ம் ஆண்டு முதல் வசூலித்த தொகையின் விவரங்களை வெளியிட்டார்.
வங்கிக் கணக்கில் குறைந்தபட்ச இருப்புதொகை (மினிமம் பேலன்ஸ்) வைக்காததற்காக அபராதமாக ரூ.21000 கோடி வசூலிக்கப்பட்டதாக கூறி உள்ளார். அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக ஏடிஎம் எந்திரத்தை பயன்படுத்தியதற்காக ரூ.8000 கோடி, எஸ்எம்எஸ் சேவைக்காக ரூ.6000 கோடி என வசூலிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார். பெருநகரங்களில் ரூ.3,000 முதல் ரூ.10,000 வரையிலும், நகர்ப்புறங்களில் ரூ.2,000 முதல் ரூ.5,000 வரையிலும், கிராமப்புறங்களில் ரூ.500 முதல் ரூ.1,000 வரையிலும் மாதாந்திர குறைந்தபட்ச இருப்புத் தொகை வைத்திருக்க வேண்டும் என பெரும்பாலான வங்கிகள் நிர்ணயம் செய்துள்ளன. இந்த இருப்புத் தொகையை பராமரிக்காததால் 400 ரூபாய் முதல் 500 ரூபாய் வரையிலான கட்டணங்கள் விதிக்கப்படலாம்.