“நாட்டையே மணிப்பூரில் பாஜக கொன்றுவிட்டது” ராகுல் காந்தி கடும் தாக்கு
1 min read
“BJP has killed the country in Manipur” Rahul Gandhi hit hard
9/8/2022
நாட்டையே மணிப்பூரில் பாஜக கொன்றுவிட்டது ராகுல் காந்தி பாராளுமன்றத்தில் கடுமையாக தாக்கி பேசினார்.
ராகுல்காந்தி
மக்களவையில் நம்பிக்கை இல்லா தீர்மானம் மீதான விவாதத்தில் ராகுல் காந்தி தனது உரையை தொடங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-
மக்களவையில் மீண்டும் என்னை நியமித்ததிற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். முன்பு, பாராளுமன்றத்தில் பேசியபோது அதானியை மையமாக வைத்து பேசினேன். அதானி குறித்து நான் தெரிவித்த கருத்து சில மூத்த உறுப்பினர்களுக்கு கஷ்டமாக இருந்தது. இன்று அதானி பற்றி பேச போவதில்லை. மூத்த உறுப்பினர்கள் அச்சப்பட வேண்டாம். பிரதமர் மோடி சொன்னது போல் இன்று நான் இதயத்தில் இருந்து பேசுகிறேன்.
நடைபயணம்
கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை நடைபயணம் சென்றது ஏன் என கேள்வி எழுப்பினர்.
கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை நடைபயணம் சென்றேன். எனது யாத்திரை இன்னும் முடியவில்லை. கன்னியாகுமரியில் இருந்து நடைபயணத்தை தொடங்கியபோது நாட்டையும், மக்களவையும் பார்க்க விரும்பினேன். யாத்திரையின் தொடக்கத்தில் 8 முதல் 10 கிலோமீட்டர் நடந்தே சென்றேன். யாத்திரையின்போது நிறைய பாடங்களை நான் கற்றுக்கொண்டேன். யாத்திரை செல்ல செல்ல சாமானிய மக்களை சந்திக்கும் வாய்ப்பு குறைந்துவிட்டது.
பயிர் காப்பீடு குறித்து விவசாயி பகிர்ந்த வலி என்னையும் தொற்றிக் கொண்டது. நாட்டு மக்களின் வலியை உணர வேண்டும். மக்களின் துக்கமே எனது துக்கம். அவர்களின் வலியே எனது வலி.
மணிப்பூர்
மணிப்பூரை இன்று நீங்கள் இரண்டாக பிரித்துவிட்டீர்கள். சில நாட்களுக்கு முன்பாக நான் மணிப்பூர் சென்றேன். பிரதமர் மோடி இன்னும் செல்லவில்லை. மணிப்பூரில் பிரதமர் செய்யாததை தான் செய்தேன். மணிப்பூரில் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்ட மக்களை சந்தித்து பேசினேன். தனது கண் முன்னே தனது ஒரே மகளை சுட்டுக் கொன்றுவிட்டதாக மணிப்பூர் பெண் ஒருவர் சொன்னார். மகனை இழந்த பெண் உடைமைகள் அனைத்தையும் விட்டுவிட்டு வெளியேறியதாக கூறினார். ஒரு புகைப்படத்தை காட்டி இதுவே என்னிடம் இருக்கும் மிச்சம் என அந்த பெண் சொன்னார்.
மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்று வரும் சம்பவம் ஒட்டு மொத்த நாட்டின் மீதான கொலை. இந்திய தேசத்தை மணிப்பூர் சம்பவத்தின் மூலம் கொன்றுவிட்டது. பாஜகவின் அரசியல் மணிப்பூரை மட்டுமல்ல நாட்டையே மணிப்பூரில் கொன்றுவிட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.