உலக அளவில் உற்பத்தி பாதிப்பு: நாடு முழுவதும் காபி விலை உயரும் அபாயம்
1 min read
Global production impact: Risk of coffee price rise across the country
9.8.2023
உலக அளவில் உற்பத்தி பாதிக்கப்பட்டு இருப்பதாலி் நாடு முழுவதும் காபி விலை உயரும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
காபி பயிர்
பலரும் விரும்பி பருகும் பானங்களில் காபி முதன்மையானது. இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் காபி பயிரிட்டாலும் பிரேசில், வியட்நாம் போன்ற நாடுகளில் இருந்து காபி இறக்குமதியும் செய்யப்படுகிறது. இந்திய காபி வெளிநாடுகளுக்கு செல்கிறது.
இந்நிலையில் உலக அளவில் பிரேசில், வியட்நாமில் காபி உற்பத்தி குறைந்துள்ளது. இந்தியாவிலும் பருவமழை குறைவால் காபி உற்பத்தி சரிந்துள்ளது. இதன்காரணமாக நாடு முழுவதும் காபி விலை உயரும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
கர்நாடகாவின் சிக்கமளூருவில் உள்ள எஸ்டேட்டுகளில் இருந்து தரமான காபி கொட்டைகளை விற்பனை செய்யும் வியாபாரிகள் அதன் விலையை கணிசமாக உயர்த்தி உள்ளனர். ரோபஸ்டா மற்றும் பீப்ரி ரக காபி கொட்டைகள் கிலோவுக்கு ரூ.580 ஆக இருந்தது. தற்போது இது ரூ.64 முதல் ரூ.650 வரை விற்கப்படுகிறது.
ரொபஸ்டா விலை 50 சதவீதமும், அரபிகா ரக விலை 15 சதவீதமும் உயர்ந்துள்ளது. இதுபற்றி வியாபாரிகள் கூறுகையில், ஆண்டுக்கு ஒருமுறை ஜனவரி மாதம் காபி விலை உயர்த்தப்படுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு தற்போது விலை உயர்த்தும் நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் சில சிறிய காபி விற்பனையாளர்கள் கடையை மூடிவிட்டனர். காபி விளையும் சிக்கமகளூரு பகுதிகளில் காலநிலை மாற்றமும் உற்பத்தியை பாதித்துள்ளது. பூக்கும் நாட்களில் பருவமழை பெய்ததால் கடந்த ஆண்டை விட 20 சதவீதம் விளைச்சல் குறைந்துள்ளதாக காபி எஸ்டேட் ஊழியர்கள் கூறுகின்றனர்.
இந்தியாவில் 70 சதவீத காபி கர்நாடக மாநிலத்தில் உற்பத்தி ஆகிறது. தமிழகம், கேரளாவிலும் காபி உற்பத்தி செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
காபி உற்பத்தியாகும் பகுதிகளில் பழங்கள் சரியாக பழுக்காததால் வழக்கமான 2 அறுவடைகளுக்குப் பதிலாக 4 சுற்றுகள் தேர்ந்தெடுத்து அறுவடை செய்துள்ளனர்.
பிரேசிலின் அராபிகா காபி விலைகள் சர்வதேச சந்தைகளில் குறைய தொடங்கியுள்ளன. இருப்பினும், உள்நாட்டு சந்தையில் விலை சற்று அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சில நிறுவனங்கள் கடந்த ஆண்டு 200 கிராம் ஜாடியின் விலை 280 ரூபாயில் இருந்து அதே ஜாடியின் விலையை 360 ரூபாயாக உயர்த்தியுள்ளது. அடுத்த காலாண்டில் மேலும் 10 சதவீதம் விலையை உயர்த்த திட்டமிட்டுள்ளது. அரேபிகாவிற்கும் ரொபஸ்டாவிற்கும் இடையேயான விலை வேறுபாடு குறைந்துள்ளதால், அராபிகா ரக காபியை மக்கள் விரும்புவதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.
காபி பயிரிடுதற்கு தொழிலாளர் செலவில் இருந்து உரம் மற்றும் பூச்சிக்கொல்லி செலவுகள் வரை அதிகரித்து உள்ளது. ஆனால் அரபிகா காபி விலை கடந்த ஆண்டை விட இப்போது கொஞ்சம் குறைவாக உள்ளது. வணிகர்கள் அதை பொதுவாக மொத்தமாக வாங்குகிறார்கள், எனவே விலை உயரும் சூழல் உள்ளது என்று என்று கர்நாடக காபி தோட்டக்காரர்கள் சங்கத்தினர் தெரிவித்தனர்.