மணிப்பூரில் அமைதி திரும்ப மக்களவையில் தீர்மானம் நிறைவேற்றம்
1 min read
Resolution passed in Lok Sabha to restore peace in Manipur
9.8.2023
மணிப்பூரில் அமைதி திரும்ப மக்களவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மணிப்பூர் வன்முறை
மக்களவையில் இன்று மணிப்பூர் வன்முறை தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளித்தார். அவர் பேசுகையில் கூறியதவாது:-
மணிப்பூரில் நிலைமை சீராகி வருவதால், யாரும் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்ற வேண்டாம். மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட இருதரப்பு மக்களிடையே பேசியுள்ளேன். மணிப்பூர் விவகாரத்தில் அனைவரும் ஒன்றுபட்டு தீர்வு காண வேண்டும். மணிப்பூரில் அமைதி திரும்ப தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். மணிப்பூரில் நடந்த சம்பவத்தால் உண்மையிலேயே எதிர்க்கட்சிகளை விட, எங்களுக்குத்தான் வலி அதிகம். எனினும், அந்த சம்பவம் அவமானமானது என்றால், எதிர்க்கட்சிகள் அதனை அரசியாக்குவது மேலும் அவமானமானது
காங்கிரஸ் ஆட்சி காலத்தில் அதிக வன்முறைகள் நடைபெற்றுள்ளன. வன்முறைக்காக ஒருபோதும் நாங்கள் பாராளுன்றத்தை முடக்கியது இல்லை. மணிப்பூர் விவகாரத்தில் விவாதம் நடத்துவதற்கு முதல் நாளில் இருந்தே தயாராக இருந்தோம். மணிப்பூர் விவகாரத்தில் விவாதம் நடத்துவது தொடர்பாக சபாநாயகருக்கு கடிதம் கூடி எழுதியுள்ளேன். ஒரு முதலமைச்சர் சரியாக ஒத்துழைக்கவில்லை என்றால் மாற்றலாம். மணிப்பூர் முதலமைச்சர் ஒன்றிய அரசுடன் முழுவதும் ஒத்துழைக்கிறார்,
இவ்வாறு அவர் கூறினார்.
உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கோரிக்கையை ஏற்று மணிப்பூரில் அமைதி திரும்ப மக்களவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.