3987 ஹஜ் பயனாளிகளுக்கு தலா ரூ.25,070 மானியத்தொகை: முதலமைச்சர் வழங்கினார்
1 min read
Rs.25,070 each for 3987 Haj beneficiaries: Chief Minister
9.8.2023
3987 ஹஜ் பயனாளிகளுக்கு தலா ரூ.25,070 மானியத்தொகையை முதலமைச்சர் மு.க,ஸ்டாலின் வழங்கினார்.
ஹஜ் பயணிள்
தமிழ்நாடு மாநில ஹஜ் குழு மூலம் முதன்முறையாக ஹஜ் பயணம் மேற்கொள்பவர்களுக்கு அரசு ஹஜ் மானியம் வழங்கி வருகிறது.
அதற்காக இந்த ஆண்டு தமிழ்நாடு அரசால் 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, தகுதியுள்ள பயனாளி ஒருவருக்கு ரூ.25,070 வீதம் 3,987 பயனாளிகளுக்கு இம்மானியத் தொகை வழங்கப்பட உள்ளது.
இத்திட்டத்தினை செயல்படுத்தும் விதமாக, 5 பயனாளிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலா ரூ.25,070-க்கான காசோலைகளை ஹஜ் மானியத் தொகையாக வழங்கினார். நிகழ்ச்சியில், அமைச்சர்செஞ்சி கே.எஸ். மஸ்தான், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவின் செயலாளர் மற்றும் செயல் அலுவலர் முகம்மது நஜிமுத்தின், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை செயலாளர் ரீட்டா ஹரீஷ் தக்கர், சிறுபான்மை நல இயக்குநர் மு. ஆசியா மரியம் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.