பாராளுமன்றத்தில் ராகுல்காந்தி பேச்சுக்கு ஸ்மிருதி இராணி பதில்
1 min read
Smriti Irani responds to Rahul Gandhi’s speech in Parliament
9.8.2023
பாராளுமன்றத்தில் ராகுல்காந்தி பேச்சுக்கு ஸ்மிருதி இராணி பதில் அளித்தார். அப்போது, காங்கிரஸ் ஆட்சி காலத்தில் நடந்த பெண்கள் படுகொலை பற்றி பேசுவரா? என்று கேள்வி எழுப்பினார்.
ராகுல் பேச்சு
மக்களவையில் இன்று நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் தொடங்கியது. அப்போது பேசிய ராகுல் காந்தி, மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்று வரும் சம்பவம் ஒட்டு மொத்த நாட்டின் மீதான கொலை. இந்திய தேசத்தை மணிப்பூர் சம்பவத்தின் மூலம் கொன்றுவிட்டது. பாஜகவின் அரசியல் மணிப்பூரை மட்டுமல்ல நாட்டையே மணிப்பூரில் கொன்றுவிட்டது என பேசினார்.
ராகுல் காந்தி பேச்சுக்கு பதில் அளித்து மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பேசினார். அவர் பேசியதாவது:-
பெண்கள் படுகொலை
காங்கிரஸ் ஆட்சி காலத்தில் நடந்த பெண்கள் மீதான படுகொலைகளுக்கு பதில் அளிப்பீர்களா?. பாரத் என்றால் வட இந்தியா மட்டும் தானா என காங்கிரஸ் விளக்க வேண்டும். பாரத மாதா கொலை என ராகுல் பேசிய போது அதை கைதட்டி வரவேற்கிறார்கள். பாரத் என்றால் வட இந்தியா என தமிழ்நாட்டு தலைவர் ஒருவர் கூறுகிறார்.
மணிப்பூர் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.