நெட்டூர் மருத்துவமனை புதிய கட்டிடத்தை மா.சுப்பிரமணியன் திறக்கிறார்
1 min read
M. Subramanian inaugurates the new building of Nettur Hospital
11.8.2023
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம் நெட்டூர் அரசு மருத்துமனையில் புதிய கட்டிடத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வருகிற 13 ம் தேதி திறந்து வைக்கிறார். இந்த விழா குறித்து, நிர்வாகிகளுடன் திமுக மாவட்ட பொறுப்பாளர் சுரண்டை வே.ஜெயபாலன் ஆய்வு செய்து, ஆலோசனை நடத்தினார்.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகேயுள்ள நெட்டூர் அரசுமருத்துவ
மனையில், புதிதாக கட்டப்பட்டுள்ள புதிய கட்டிட திறப்பு விழா வருகிற 13ந்தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு, கட்டிடத்தை திறந்து வைத்து பேசுகிறார்.
இந்நிலையில்இந்த நிகழ்ச்சி தொடர்பாக தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் சுரண்டை வே. வே.ஜெயபாலன், நெட்டூர் அரசு மருத்துவனைக்கு சென்று, மருத்துவத்துறை அதிகாரிகள் மற்றும் திமுக நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய திமு செயலாளர்கள் செல்லத்துரை, எம்பிஎம்.அன்பழகன், சிவன் பாண்டியன், ஆலங்குளம் யூனியன் சேர்மன் எம்.திவ்யாமணிகண்டன், மாவட்ட பிரதிநிதி சீ.பொன்செல்வன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ஜெ.கே.ரமேஷ், ஒன்றிய கவுன்சிலர் சேக்முகமது, சுபாஷ் சந்திரபோஸ், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் இசக்கிபாண்டியன், பொறியாளர் அணி துணை அமைப்பாளர் மணிகண்டன், யூனியன் துணை சேர்மன் கனகராஜ்முத்துபாண்டியன், சாம்பவர்வடகரை மாறன் , மாவட்ட துணை செயலாளர் கென்னடி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.