தென்காசி மாவட்டத்தில்15ம் தேதிகிராம சபை கூட்டம்
1 min read
Tenkasi district- Village council meeting on 15th
11.8.2023
தென்காசி மாவட்டத்தில் வரும் 15ம் தேதி அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது என்று தென்காசி மாவட்ட ஆட்சியர் துரை.இரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் துரை.இரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சுதந்திர தினமான 15.08.2023 அன்று காலை 11.00 மணியளவில் தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது.
இக்கிராம சபை கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம் குறித்து விவாதித்தல், கிராமஊராட்சியின் தணிக்கை அறிக்கை, தூய்மையான குடிநீர் விநியோகத்தினை உறுதிசெய்வது குறித்து விவாதித்தல், இணைய வழி மனைப்பிரிவு மற்றும் கட்டிட அனுமதி வழங்குதல், அயோடின் கலந்த உப்பை பயன்படுத்துதல்,
அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், ஜல்ஜீவன் இயக்கம், மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதிதிட்டம், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), பிரதம மந்திரி ஊரக குடியிருப்பு திட்டம், மாற்றுத் திறனாளிகளுக்கான கணக்கெடுப்பு உரிமைகள் திட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் இதர பொருள்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
இக்கிராம சபை கூட்டங்களில் கிராம ஊராட்சிகளின் அனைத்து பொதுமக்களும் கலந்துகொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் துரை.இரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.