July 2, 2025

Seithi Saral

Tamil News Channel

தேசிய விருதுகள் பட்டியல்: சிறந்த படம் ‘ராக்கெட்ரி’, சிறந்த தமிழ்ப் படம் ‘கடைசி விவசாயி’

1 min read

National Awards List: Best Film ‘Rocketry’, Best Tamil Film ‘The Last Farmer’

24.8.2023
69-ஆவது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. டெல்லியின் நேஷனல் மீடியா சென்டரில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் தேர்வுக் குழுவினர் விருதாளர்களின் பெயர்களை அறிவித்துள்ளனர். இதில், சிறந்த படத்துக்கான விருதை ‘ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட்’ வென்றுள்ளது. சிறந்த தமிழ்ப் படத்துக்கான விருதை ‘கடைசி விவசாயி’ பெற்றுள்ளது.

69-ஆவது தேசிய திரைப்பட விருதுகளை பொறுத்தவரை, 2021-ஆம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் டிசம்பர் 31-ம் தேதி வரையிலான காலக்கடத்தில் சென்சார் செய்யப்பட்டு வெளியான படங்களுக்கு விருதுகள் அறிவிக்கபட்டுள்ளன. அப்படிப் பார்க்கும்போது ராஜமவுலியின் ‘ஆர்ஆர்ஆர்’ 2022-ஆம் ஆண்டு வெளியானபோதும், 2021 ஆண்டு நவம்பர் மாதம் இப்படத்துக்கு சென்சார் சான்றிதழ் வழங்கப்பட்டது. இதனால் இப்படமும் தற்போது கணக்கில் எடுத்துகொள்ளப்பட்டுள்ளது.

கடைசி விவசாயி

‘கடைசி விவசாயி’ படத்துக்காக மறைந்த நடிகர் நல்லாண்டிக்கு ஸ்பெஷல் மென்ஷனில் தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல ‘ஹோம்’ படத்துக்காக இந்திரன்ஸுக்கும் இவ்விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 69-ஆவது தேசிய திரைப்பட விருதுகளின் பட்டியல்:

சிறந்த திரைப்படம்: ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட் (இந்தி)
சிறந்த தமிழ் திரைப்படம்: கடைசி விவசாயி
சிறந்த பிரபலமான திரைப்படம்: ஆர்ஆர்ஆர்
சிறந்த இயக்குநர்: நிகில் மஹாஜன் (தி ஹோலி வாட்டர் – மாராத்தி)
சிறந்த தேசிய ஒருமைப்பாட்டு திரைப்படம்- தி காஷ்மீர் ஃபைல்ஸ்
சிறந்த இந்தி திரைப்படம்: சர்தார் உத்தம்
சிறந்த குஜராத்தி திரைப்படம்: செல்லோ ஷோ
சிறந்த கன்னட திரைப்படம்: 777 சார்லி
சிறந்த மராத்தி திரைப்படம்: ஏக் தா காய்சாலா
சிறந்த மலையாள திரைப்படம்: ஹோம்
சிறந்த நடிகர்: அல்லு அர்ஜூன் (புஷ்பா)
சிறந்த நடிகர் (பெண்): ஆலியா பட் (கங்குபாய் காத்தியவாடி), கீர்த்தி சனோன் (மிமி)
சிறந்த உறுதுணை நடிகர் (ஆண்): பங்கஜ் திரிபாதி (மிமி)
சிறந்த துணை நடிகர் (பெண்): பல்லவி ஜோஷி (தி காஷ்மீர் ஃபைல்ஸ்)
சிறந்த குழந்தை நட்சத்திரம்: பாவின் ரபாரி (செல்லோ ஷோ)
சிறந்த பின்னணி பாடகர் (ஆண்): காலபைரவா ‘கோமுரம் பீமடு’ (ஆர்ஆர்ஆர்)
சிறந்த பின்னணி பாடகர் (பெண்): ஸ்ரேயா கோஷல் ‘மாயவா சாயவா’ (இரவின் நிழல்)
சிறந்த ஒளிப்பதிவாளர்: அவிக் முகோபாத்யாயா (சர்தார் உதம்)
சிறந்த தழுவல் திரைக்கதை எழுத்தாளர்: சன்ஜய் லீலா பன்சாலி, உட்டர்காஷினி (கங்குபாய் காத்தியவாடி)
சிறந்த திரைக்கதை எழுத்தாளர்: ஷாயி கபீர் (நயாட்டு)
சிறந்த படத்தொகுப்பு: சன்ஜய் லீலா பன்சாலி (கங்குபாய் காத்தியாவாடி)
சிறந்த பின்னணி இசை: எம்எம்கீரவாணி (ஆர்ஆர்ஆர்)
சிறந்த ஒப்பனை கலைஞர்: பிரித்தீ சிங் (கங்குபாய் காத்தியாவாடி)
சிறந்த இசையமைப்பாளர்: தேவிஸ்ரீ பிரசாத் (புஷ்பா)
சிறந்த ஸ்பெஷல் எஃபெக்ட்: ஸ்ரீனிவாஸ் மோகன் (ஆர்ஆர்ஆர்)
சிறந்த நடன இயக்குநர்: ப்ரேம் ரக்‌ஷித் (ஆர்ஆர்ஆர்)
சிறந்த தெலுங்கு படம்: உப்பெனா
சிறந்த சண்டைக் கலைஞர்: கிங் சாலமன் (ஆர்ஆர்ஆர்)
பி.லெனின் இயக்கிய சிறந்த கல்வி திரைப்படமாக ‘சிற்பங்களின் சிற்பங்கள்’ திரைப்படத்துக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
‘கருவறை’ என்ற ஆவணப் படத்துக்காக இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவாவுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.