July 2, 2025

Seithi Saral

Tamil News Channel

நாட்டுக்கு பிரச்சினை வரும்போது ஆன்மீகவாதிகளும் போராடி உள்ளனர் – முதல்வர் ஸ்டாலின்

1 min read

Spiritualists are also struggling when the country is in trouble – CM Stalin

24.8.2023
மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியின் 75ஆம் ஆண்டு பவள விழா நிறைவை முன்னிட்டு நடைபெற்ற முப்பெரும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். கல்லூரியின் பவளவிழா மலரையும், திருக்குறள் உரைவளம் நூலையும் வெளியிட்டு, தருமை இணையதள வானொலி மற்றும் தொலைக்காட்சி ஒலி ஒளிப்பதிவகத்தினையும் முதலமைச்சர் இன்று திறந்து வைத்தார்.
அப்போது முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:-

1946ம் ஆண்டு தருமை ஆதீனம் 25வது குருமகா சன்னிதானம் தொடங்கிய இக்கல்லூரி 1972ம் ஆண்டு நடந்த வெள்ளிவிழாவில் கலைஞர் கலந்துகொண்டார்., பொன்விழா நிகழ்ச்சியில் பேராசிரியர் அன்பழகனும் கலந்துகொண்டு சிறப்பித்திருக்கிறார். பவளவிழா கலந்துகொண்டு இந்த கலைரயங்கில் உரையாற்றுவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

அறநிலையத் துறையை மிக சிறப்பாக நிர்வகித்து வருகிறோம். ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம் என்ற அடிப்படையில் தி.மு.க. அரசு செயல்பட்டு வருகிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான வரலாற்றுச் சிறப்புமிக்க நூற்றுப் பன்னிரண்டு திருக்கோவில்களை பழமை மாறாமல் சீர் செய்ய 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு. இந்த நிதியாண்டில் மட்டும் 5,078 திருக்கோவில்களின் திருப்பணிகள் மூலம் இந்து சமய அறநிலையத் துறையைக் காத்து வரும் ஆட்சிதான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி. இதனை மக்கள் அறிவார்கள். அறிவது மட்டுமல்ல வாழ்த்திக்கொண்டும் இருக்கிறார்கள்.
தமிழ் மொழி, தமிழர்கள், தமிழ்நாடு என்ற மாநிலம் காப்பாற்றப்பட வேண்டும். நாட்டுக்கும், மக்களுக்கும் பிரச்சினை வரும்போது ஆன்மீகவாதிகளும் போராடி உள்ளனர்.
இவ்வாறு அவர் பேசினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.