மந்தியூர் ஊராட்சியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பணி துவக்கவிழா
1 min read
Inauguration ceremony of overhead reservoir tank in Mandiyur panchayat
25.8.2023
தென்காசி மாவட்டம் கடையம் ஊராட்சி ஒன்றியம், மந்தியூர் ஊராட்சிக்குட்பட்ட பிள்ளை குளம் கிராமத்தில் 30000 லிட்டர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிஅடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மந்தியூர் ஊராட்சி மன்ற தலைவர் கல்யாணசுந்தரம் தலைமையில் கடையம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் திருமலை முருகன் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தென்காசி மாவட்ட கூட்டமைப்பு தலைவர் டி.கே பாண்டியன் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் கீழ கடையம் பூமிநாதன் திருமலையப்ப புரம் ஊராட்சி மன்ற தலைவர் மாரியப்பன்,
வீராசமுத்திரம் ஊராட்சி மன்ற தலைவர் ஜீனத் பர்வீன் யாஹூப் மற்றும் ஊர் பொதுமக்கள் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராமசாமி, காளி, துணைத் தலைவர் ராகவேந்திரன் வேம்பு, இளங்கோ, லட்சுமணன் உட்பட கலந்து கொண்டனர்