இந்தியர்களை ஆரியன், திராவிடன் என பிரித்தது ஆங்கிலேயேர்கள்- கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு
1 min read
Indians were divided into Aryan and Dravidian by the British – Governor RN Ravi
25.8.2023
இந்தியர்களை ஆரியன், திராவிடன் என ஆங்கிலேயேர்களே பிரிவினை ஏற்படுத்தினர் என்று கவர்னர் ஆர்.என்.ரவி கூறினார்.
சந்நியாசிகள் சங்கம்
கோவை பேரூர் தமிழ் கல்லூரி வளாகத்தில் அகில பாரதிய சந்நியாசிகள் சங்கம் சார்பில் 7 நாட்கள் நடைபெறும் நொய்யல் பெருவிழா இன்று தொடங்கியது. விழாவினை கவர்னர் ஆர்.என்.ரவி குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி பேசியதாவது:
சந்நியாசிகள் பங்கேற்றுள்ள இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதை நான் ஆசிர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன். நம் நாட்டில் நீர்நிலைகளுடனான தொடர்பு என்பது நமது உணர்வுகளுடன் தொடர்புடையதாகும். ஆனால், பல ஆண்டுகளாக அந்தியர்களால் படையெடுப்பு காரணமாக அந்த உணர்வானது மறைக்கப்பட்டது.
ஆங்கிலேயர்கள்
ஆங்கிலேயர்கள் நம் கலாச்சாரம், உயிர்த்தன்மையை சிதைக்கும் எண்ணத்துடன் வந்தார்கள். அவர்களின் படையெடுப்புக்கு பிறகே இந்தியர்கள் சாதி, மதம் என பிரிக்கப்பட்டோம். அந்நியர்களே ஆரியன், திராவிடன் என பிரிவினையை ஏற்படுத்தினார்கள். அந்நியர்களின் படையெடுப்புக்கு பிறகே நாம் தனித்து விடப்பட்டோம்.
அன்னை இயற்கையை பாழாக்கி வரும் இந்த காலத்தில் இதுபோன்று நிகழ்வு அவசியம். அன்னை இயற்கையை பாழாக்கி வருவதன் விளைவு தான், பருவநிலை மாற்றத்திற்கு காரணம். தண்ணீர் இல்லையென்றால் ஒன்றும் இல்லை. அதனால், நீரை அன்னையாக பாவித்து பிரார்த்தனை செய்ய வேண்டும். ரிஷிகளின் வெளிச்சமே தற்போது உலகத்திற்கு தேவையானது. அனைவரும் ஒரு குடும்பம் என இந்தியாவை எழுப்ப வேண்டும். நாம் யார் என்பதை உணர வைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.