ஆலங்குளம் அரசு பள்ளியில் காலை சிற்றுண்டி திட்டத்தை ஜெயபாலன் துவக்கி வைத்தார்
1 min read
Jayapalan inaugurated the breakfast program at Alankulam Government School
25.8.2023
தமிழக அரசு துவக்கி உள்ள புதிய திட்டமான அரசு பள்ளி மாணவர்களுக்கான காலை சிற்றுண்டி திட்ட த்தினை சுரண்டையில் தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் சுரண்டை வே. ஜெயபாலன், தனுஷ் குமார் எம்.பி ஆகியோர் துவக்கி வைத்தனர்.
தென்காசி தெற்கு மாவட்டம் ஆலங்குளம் வடக்கு ஒன்றியம் குறிஞ்சான்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தமிழக முதல்வரின் காலை சிற்றுண்டி திட்டத்தை பள்ளி குழந்தைகளுக்கு வழங்கும் திட்டத்தை தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் சுரண்டை வே ஜெயபாலன், தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் தனுஷ் எம் குமார் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
முன்னதாக சுரண்டை நகராட்சி பள்ளியில் இருந்து சாம்பவர் வடகரை பள்ளிக்கு செல்லும் சிற்றுண்டி வண்டியை தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் சுரண்டை வே. ஜெயபாலன் தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் தனுஷ் எம் குமார் ஆகியோர் கொடி அசைத்து அனுப்பி வைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் ஆலங்குளம் வடக்கு ஒன்றிய செயலாளர் எம்பிஎம்.அன்பழகன், ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன், ஊராட்சி மன்ற தலைவர் வசந்தா, பொதுக்குழு உறுப்பினர் ராஜேஷ்வரன், திமுகதலைமை கழக பேச்சாளர் வேங்கை சந்திரசேகர், சாம்பவர் வடகரை கோ.மாறன், விஜயகுமார் ஒன்றிய கவுன்சிலர் ஷேக்முகம்மது, அ.சசிக்குமார், கிளைச் செயலாளர் ரமேஷ் மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் ஜே கே ரமேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.