கடையத்தில் பஞ்சாயத்து கூட்டமைப்பினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
1 min read
Panchayat confederates protest at Kadayam
27.8.2023
கடையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் முன்பாக, ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பின் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தென்காசி மாவட்ட கூட்டமைப்பு தலைவரும், கோவிந்தபேரி ஊராட்சி தலைவருமான டி.கே. பாண்டியன் தலைமை தாங்கி பேசினார்.
கூட்டமைப்பு செயலாளர் பூமிநாத் முன்னிலை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தின்போது பஞ்சாயத்து ராஜ் திட்டத்தை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. மேலும் ஏ.ஜி.எம்.டி. திட்டத்தின் வேலைகளை அந்தந்த ஊராட்சியின் மூலமாக டெண்டர் நடைபெற வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் ஊராட்சி தலைவர்கள் கணேசன், மாரியப்பன், மாரி சுப்பு ,குயிலி லட்சுமணன், முத்துச்செல்வி ரஞ்சித், முத்துலட்சுமி ராமதுரை, ஸாருகலா ரவி, அழகு துரை, முருகன், கல்யாண சுந்தரம் , முப்புடாதி பெரியசாமிஆகியோர் கலந்து கொண்டு பேசினர். முடிவில் கீழாம்பூர் ஊராட்சி தலைவர் மாரிசுப்பு நன்றி கூறினார்.