அண்ணாமலை பாதயாத்திரையின் தென்காசி பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர் நியமனம்
1 min read
Appointment of Tenkasi Parliamentary Constituency Officer of Annamalai Pathayatra
28.8.2023
தமிழகத்தில் பா.ஜ.க. சார்பில் மாநில தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் பாதயாத்திரையின் 2-ம் கட்ட நடைபயணம் வருகிற 3-ந் தேதி தென்காசி மாவட்டத்தில் தொடங்குகிறது.
இந்நிலையில் பாதயாத்திரை குழுவின் பொறுப்பாளரும் மாநில துணைத்தலைவருமான நரேந்திரன், பாதயாத்திரை குழுவின் இணை பொறுப்பாளரும், மாநில விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு தலைவருமான அமர் பிரசாத் ரெட்டி ஆகியோர் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
, தமிழ்நாடு பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நடந்து வரும் என் மண் என் மக்கள் பாத யாத்திரையின் இரண்டாவது கட்ட நடைபயணம் வருகிற 3-ந் தேதி தென்காசி மாவட்டத்தில் தொடங்குகிறது. இப்பயணத்தின் தென்காசி பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளராக தமிழக பா.ஜ.க. வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில துணைத்தலைவர் விஸ்வை ஆனந்தன் நியமனம் செய்யப்படுகிறார். அவருடன் கட்சியினர் இணைந்து செயல்படுமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.