தென்காசி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
1 min read
Tenkasi District People Grievance Day Meeting
29.8.2023
தென்காசி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் க
மாவட்ட ஆட்சித் தலைவர் துரை இரவிச்சந்திரன் தலைமையில் நேற்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித் தலைவர் பெற்றுக் கொண்டார் . இந்த நிகழ்ச்சியில் வருவாய் அலுவலர் பத்மாவதி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொறுப்பு) ராஜ மனோகரன், பிற்படுத்தப் பட்டோர் நல அலுவலர் சங்கர நாராயணன், மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் ஜெயபிரகாஷ், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் முருகானந்தம் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் உதவி உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் 10 பேருக்கு காதொலி கருவிகள் தலா ரூ.8,500 வீதம் மொத்தம் ரூ.85 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் துரை இரவிச்சந்திரன் வழங்கினார்.