ஆய்வு செய்துகொண்டே விக்ரம் லேண்டரை போட்டோ எடுத்து அனுப்பிய பிரக்யான் ரோவர்
1 min read
Pragyan rover who took a photo of the Vikram lander while inspecting it
30/8/2023
நிலவில் ஆய்வு செய்துகொண்டே
விக்ரம் லேண்டரை பிரக்யான் ரோவர் போட்டோ எடுத்து அனுப்பியது.
நிலவின் தென் துருவம்
சந்திரயான்-3 விண்கல திட்டம் மூலம் இந்தியா நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்து வருகிறது. கடந்த 23-ந்தேதி விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கியது. அதில் இருந்து பிரக்யான் ரோவர் சுமார் ஆறு மணி நேரம் கழித்து வெளிவந்து நிலவில் கால் பதித்தது.
அதன்பின் மெல்ல மெல்ல ஊர்ந்து நிலவின் மேற்பரப்பில் ஆய்வு செய்து வருகிறது. ஒரு பெரிய பள்ளத்தை கண்டறிந்து தனது பாதையை மாற்றியது.
நேற்று சல்பைடு(கந்தகம்) தாது இருப்பதாக கண்டறிந்தது.
இந்த நிலையில் இன்று பிரக்யான் ரோவர், ஆய்வு செய்து கொண்டே, விக்ரம் லேண்டரை படம் பிடித்து அனுப்பியுள்ளது. நேவிகேசன் கேமராவில் எடுக்கப்பட்ட இந்த படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கி இன்றுடன் ஒரு வாரம் ஆகிறது. இன்னும் ஒரு வாரம் ஆய்வை மேற்கொள்ளும்.