குற்றாலம் அருவிகளில்தண்ணீர் வரத்து
1 min read
Water flows in Kurdalam waterfalls
30.8.2023
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் சீசன் நிறைவு பெற்ற நிலையில் தண்ணீர் இன்றி அருவிகள் வறண்டு காணப்பட்டன. இந்நிலையில் நேற்று மாலையில் மேற்குத் தொடர்ச்சி மலை பகுதியில் பரவலாக மழை பெய்தது.
குற்றாலம் ஐந்தருவி மலைப் பகுதியிலும் மழை பெய்ததால் ஐந்தருவியில் தண்ணீர் வரத்து ஏற்பட்டது. இரவு தண்ணீர் வரத்து அதிகரித்தது. ஐந்து கிளைகளிலும் தண்ணீர் கொட்டியது. இதனால் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை யாக ஐந்தருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.
குற்றாலம் மெயின் அருவியிலும் இரவு தண்ணீர் வரத்து ஏற்பட்டது. ஒரு மாதத்திற்கு மேல் மழை பெய்யாமல் அருவிகளில் தண்ணீர் இன்றி காணப்பட்ட நிலையில் நேற்று பெய்த மழையால் குற்றாலம் மெயின் அருவி மற்றும்
ஐந்தருவியில் தண்ணீர் விழுந்ததை அடுத்து சுற்றுலாப் பயணிகள் உற்சாகத்துடன் அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர்.