தென்காசியில் திமுக முன்னோடிகளுக்கு பொற்கிழி- அமைச்சர் உதயநிதி வழங்கினார்
1 min read
Minister Udayanidhi gave gold to DMK pioneers in Tenkasi
6.9.2023
தென்காசியில் நடைபெற்ற விழாவில் திமுக முன்னோடிகளுக்கு திமுக இளைஞரணி செயலாளரும் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
தென்காசி இசக்கி மகாலில் நேற்று திமுக முன்னோடி களுக்கு பொற்கிழி ரூபாய் 10 ஆயிரம் பணம் முடிப்பு, நினைவுப்பரிசு வழங்கும் விழா மற்றும் தென்காசி மாவட்ட இளைஞரணி செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. விழாவில் பங்கேற்ற திமுக இளைஞரணி செயலாளரும் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் திமுக முன்னோடிகளுக்கு பொற்கிழி மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது: தமிழகத்தில் எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் திமுக அரசு மீது மக்கள் அளவில்லா மதிப்பும், மரியாதையும் வைத்துள்ளனர். திமுகவின் செல்வாக்கு உயர்வதை கண்டு எதிர்கட்சியினர் பொய் பிரசாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர். எப்படியாவது பொய் செய்தியை பரப்ப வேண்டும் என்ற எண்ணத்தில் பா.ஜ.க., செயல்படுகிறது.
என்னைப்பற்றிதான் கடந்த இரண்டு நாட்களாக இந்தியா முழுவதும் பேசப்பட்டு வருகிறது. நான் சனாதன கொள்கையைத்தான் ஒழிக்க வேண்டும் என நான் பேசினேன். ஆனால் இதனை பாஜகவினர் தவறாக பிரசாரம் செய்து வருகின்றனர். அயேத்தியைச் சேர்ந்த சாமியார் எனது தலையை வெட்டி கொண்டு வந்தால் ரூ.10 கோடி தருவதாக கூறியுள்ளார். என் தலையை சீவ 10 ரூபாய் சீப்பு தந்தால் நானே சீவி கொள்வேன். சாமியாருக்கு அவ்வளவு பணம் எப்படி வந்தது என்று கேட்ட போது, அவர் தனக்கு ரூ.500 கோடி சொத்து இருப்பதாக கூறியுள்ளார். இந்த சாமியாருக்கு அவ்வளவு பணம் எப்படி வந்தது.
கலைஞர் கொள்கை வாரிசு, பெரியார் கொள்கை வாரிசு, அண்ணா கொள்கை வாரிசு நான்தான். மணிப்பூர் மற்றும் குஜராத் மாநிலத்தில் இன படுகொலை செய்தது பா.ஜ.க.,தான். மணிப்பூர் 5 மாதங்களாக பற்றி எறிகிறது. அங்கு இரண்டு பெண்களை அடித்து இழுத்துச் சென்றதை பார்த்திருப்பீர்கள். மணிப்பூரைச் சேர்ந்த 18 விளையாட்டு வீரர்கள் தமிழகம் வந்து பயிற்சி எடுத்து வருகின்றனர். இதுதான் திராவிட மாடலுக்கும் ஆரிய மாடலுக்கும் உள்ள வித்தியாசம்.
கலைஞருக்கும் திமுக தொண்டர்களுக்கும் உள்ள உறவு. 1976ம் ஆண்டு எமர்ஜென்சி காலத்தில் கலைஞரை தனிமைப் படுத்த முயற்சித்தனர். தொண்டர்கள் சந்திக்க தடை விதிக்கப்பட்;டது. திருப்பதி, திருத்தணிக்கு செல்வதாக கூறி அங்கு மொட்டை போட்டுவிட்டு மெரினாவிற்கு வந்து கலைஞரை வாழ்த்தியவர்கள்தான் திமுக தொண்டர்கள்.
மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்குவது போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது பெருமையாக இருக்கிறது. நீங்கள் இல்லாமல் கட்சியும் கிடையாது. ஆட்சியும் கிடையாது. உங்களை பார்த்து பெருமையாகவும் இருக்கிறது. பொறாமை யாகவும் இருக்கிறது. தந்தை பெரியார், அறிஞர் அண்ணாவை நீங்கள் நேரில் பார்த்திருக்கிறீர்கள். ஆனால் நான் அவர்களை பார்த்ததில்லை. அதனால் தான் உங்களை பார்த்து நான் பொறாமை படுகிறேன். அறிஞர் அண்ணா, பெரியார் மறு உருவமாக நான் உங்களை பார்க்கிறேன். இவ்வாறு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
இந்த
நிகழ்ச்சியில் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் சுரண்டை
வே.ஜெயபாலன், தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் ஈ.ராஜா எம்எல்ஏ, தென்காசி மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தமிழ்ச்செல்வி போஸ்,தென்காசி நகர திமுக செயலாளரும் நகர்மன்றத் தலைவருமான ஆர் சாதிர், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்கள் டி.ஆர். கிருஷ்ணராஜா, முகேஷ், மாவட்ட அவைத் தலைவர் சுந்தர மகாலிங்கம், பத்மநாபன்,மண்டல இளைஞர் அணி துணைச் செயலாளர் ஜி பி ராஜா, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் இலத்தூர் பூ.ஆறுமுகச்சாமி, மா.செல்லத்துரை, யூ.எஸ்.டி.சீனிவாசன்,சேக் தாவுது, ஜேசுராஜன், தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் செங்கோட்டை எஸ்.எம். ரஹீம், சீவநல்லூர் கோ. சாமித்துரை, மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர் கொட்டாகுளம் இசக்கிபாண்டியன்,மாவட்டத் துணைச் செயலாளர் வழக்கறிஞர் க.கனிமொழி, கென்னடி, ஒன்றிய செயலாளர்கள் தென்காசி ஆர் எம் அழகு சுந்தரம் வல்லம் எம் திவான் ஒலி, செங்கோட்டை ஆ.ரவிசங்கர், கீழப்பாவூர் க.சீனித்துரை, கடையம் ஜெயக்குமார், மகேஷ் மாயவன், ஆலங்குளம் அன்பழகன், செல்லத்துரை, சங்கரன்கோவில் லாலா சங்கர பாண்டியன், வாசுதேவநல்லூர் பொன் முத்தையா பாண்டியன், செங்கோட்டை நகரச் செயலாளர் வழக்கறிஞர் அ வெங்கடேசன், கடையநல்லூர் நகர செயலாளர் அப்பாஸ் புளியங்குடி அந்தோணிசாமி சங்கரன்கோவில் பிரகாஷ், தென்காசி யூனியன் சேர்மன் வல்லம் முசேக் அப்துல்லா, ஆலங்குளம் திவ்யா மணிகண்டன், மாவட்ட கவுன்சிலர் பூங்கொடி, குற்றாலம் பா.இராமையா(எ) துரை, வே.கோமதிநாயகம்,
சாம்பவர் வடகரை கோ.மாறன், சுரண்டை சசிகுமார், தென்காசி யூனியன் துணை சேர்மன் கனகராஜ் முத்துப் பாண்டி யன், சுந்தரபாண்டியபுரம் மாரிமுத்து பாண்டியன் குற்றாலம் இரா.பேச்சிமுத்து, ஊர்மேல னழகியான் கருப்பண்ணன், தென்காசி கல்வத்து,
திமுக பேரூர் செயலாளர்கள் மேலகரம் இ.சுடலை, குற்றாலம் சங்கர், இலஞ்சி முத்தையா, சுந்தரபாண்டிய புரம் பண்டாரம், பண்பொழி கரிசல் ராஜராஜன், சாம்பவர் வடகரை முத்து, தென்காசி அ.சேக்பரீத், நா. பாலசுப்பிர மணியன் சே. தங்கப்பாண்டி யன், பழக்கடை, கோபால் ராம், குமார், ரகுமத்துல்லா, பால்ராஜ், ராம்துரை, இசக்கி துரை, இசக்கிரவி உட்பட பலர் கலந்து கொண்டனர்