4 நாட்களாக சாரல் மழை: குற்றாலத்தில் மீண்டும் ‘குளுகுளு சீசன்’
1 min read
Heavy rain for 4 days: ‘Glugulu season’ again in Courtalam
தென்காசி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற முக்கிய சுற்றுலா தளமாக விளங்கிவரும் குற்றால அருவிகளில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் சீசன் களை கட்டுவது வழக்கம். அப்போது அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலை மோதும். ஆனால் இந்த ஆண்டு போதிய அளவு மழை இல்லாத காரணத்தினால் முழுமையான சீசன் இல்லாமல் போனது. அவ்வப்போது அருவிகள் வறட்சி அடையும் நிலையும் ஏற்பட்டது. கடந்த மாதமும் கோடையை போல கடுமையான வெயில் சுட்டெரித்ததால் பொது மக்கள் பெரிதும் சிரமப்பட்டு வந்தனர். இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கடந்த 4 நாட்களாக இரவு-பகல் என பெய்து வரும் சாரல் மழையினால் ஐந்தருவி, மெயின் அருவி, பழைய குற்றால அருவிகளுக்கு தண்ணீர் வரத்து சற்று அதிகரித்து உள்ளது. இதனால் குற்றாலத்தில் மீண்டும் ‘குளுகுளு சீசன்’ தொடங்கி உள்ளது. குற்றாலம் மெயின் அருவியில் இன்று காலையில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. மேலும் ஐந்தருவி,பழைய குற்றாலம் அருளிலும் சீராக தண்ணீர் விழுந்து வருவதால் சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் குளித்து மகிழ்ந்து வருகின்றனர். தென்காசி மாவட்டத்தில் திரவிய நகர், ஆவுடையானூர்,குற்றாலம், கடை யம் பகுதிகளில் காலை முதல் மிதமான சாரல் மழை பெய்து வருவதுடன் ரம்யமான சூழ்நிலையும் நிலவி வருவதால் விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.