தென்காசி மாவட்டத்தில் விவசாயத்திற்கு வண்டல் மண், களிமண் எடுக்க அனுமதி
1 min read
Permission to take alluvial soil, clay for agriculture in Tenkasi district
7.9.2023
தென்காசி மாவட்ட கலெக்டர் துரை ரவிச் சந்திரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சி துறை பராமரிப்பில் உள்ள குளங்களில் இருந்து விவசாயம் மற்றும் மண்பாண்டம் தொழில் பயன்பாட்டிற்கு கட்டணம் இல்லாமல் வண்டல் மண் மற்றும் களிமண் வெட்டி எடுப்பதற்காக தென்காசி மாவ ட்டத்தில் பொதுப் பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சி துறை கட்டுப்பாட்டில் உள்ள தகுதி வாய்ந்த 310 குளங்கள் கண்டறியப்பட்டு தென்காசி மாவட்ட அரசிதழில் அறிவி க்கை செய்யப்பட்டு ள்ளது. மேலும் தென்காசி மாவட்டத்தில் ராஜ பாளையம் மேல் வைப்பாறு வடிநில கோட்டம் கட்டுப் பாட்டில் உள்ள தகுதி வாய்ந்த 4 குளங்கள் கண்டறியப்பட்டு மாவட்ட அரசிதழில் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது. விவசாய பயன்பாட்டிற்காக நன்செய் நிலங்களை மேம்படுத்தும் வகைக்கு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை 1 ஏக்கர் நிலத்திற்கு 75 கன மீட்டர் அளவும், புன்செய் நிலங்களை மேம்படுத்து வதற்காக 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை 1 ஏக்கர் நிலத்திற்கு 90 கன மீட்டர் அளவும், மேலும் மண் பாண்ட தொழில் பயன் பாட்டிற்காக 60 கிராம் கன மீட்டர் அளவும், சொந்த பயன்பாட்டிற்கு 30 கன மீட்டர் அளவும் கட்டணம் இல்லாமல் வெட்டி எடுத்து பயன்படுத்த அனுமதிக்கப் பட்டுள்ளது. எனவே இச்சலு கையினை பயன்படுத்தி விவசாயிகள் தங்களது நிலத்தின் தரத்தினை மேம்படுத்தும் வகைக்கு தங்களது விவசாய நிலம் தொடர்பான பட்டா, 10 (1) அடங்கல், சிட்டா, கிரைய பத்திரம் மற்றும் புலப்பட நகல் ஆகிய வற்றுடன் மண்பாண்ட தொழி லாளர்கள் சங்க உறுப்பினர் அடையாள அட்டை மற்றும் சான்று களுடனும் சம்பந்தப் பட்ட தாசில்தார்களிடம் உரிய படிவத்தில் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
==
4 நாட்களாக சாரல் மழை: குற்றாலத்தில் மீண்டும் ‘குளுகுளு சீசன்’
தென்காசி: தென்காசி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற முக்கிய சுற்றுலா தளமாக விளங்கிவரும் குற்றால அருவிகளில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் சீசன் களை கட்டுவது வழக்கம். அப்போது அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலை மோதும். ஆனால் இந்த ஆண்டு போதிய அளவு மழை இல்லாத காரணத்தினால் முழுமையான சீசன் இல்லாமல் போனது. அவ்வப்போது அருவிகள் வறட்சி அடையும் நிலையும் ஏற்பட்டது. கடந்த மாதமும் கோடையை போல கடுமையான வெயில் சுட்டெரித்ததால் பொது மக்கள் பெரிதும் சிரமப்பட்டு வந்தனர். இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கடந்த 4 நாட்களாக இரவு-பகல் என பெய்து வரும் சாரல் மழையினால் ஐந்தருவி, மெயின் அருவி, பழைய குற்றால அருவிகளுக்கு தண்ணீர் வரத்து சற்று அதிகரித்து உள்ளது. இதனால் குற்றாலத்தில் மீண்டும் ‘குளுகுளு சீசன்’ தொடங்கி உள்ளது. குற்றாலம் மெயின் அருவியில் இன்று காலையில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. மேலும் ஐந்தருவி,பழைய குற்றாலம் அருளிலும் சீராக தண்ணீர் விழுந்து வருவதால் சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் குளித்து மகிழ்ந்து வருகின்றனர். தென்காசி மாவட்டத்தில் திரவிய நகர், ஆவுடையானூர்,குற்றாலம், கடை யம் பகுதிகளில் காலை முதல் மிதமான சாரல் மழை பெய்து வருவதுடன் ரம்யமான சூழ்நிலையும் நிலவி வருவதால் விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.