பூலாங்குளம் அரசுப்பள்ளியில் 138 மாணவர்களுக்கு இலவச சைக்கிள்கள்
1 min read
Free bicycles for 138 students in Phoolangulam Govt
8.9.2023
தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம், பூலாங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் இலவச சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது. கீழப்பாவூர் யூனியன் சேர்மன் சீ.காவேரி சீனித்துரை தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் திரவியக்கனி முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியை ஜுலியா டெய்சி மேரி வரவேற்றார். மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் ஜெய பாலன், மாநில சுற்றுச்சூழல் அணித்தலைவர் பூங்கோதை ஆலடி அருணா ஆகியோர் பங்கேற்று 138 மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கி பேசினர். இவ்விழாவில் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ஜெ.கே.ரமேஷ், மாவட்ட பிரதி நிதிகள் சீ.பொன் செல்வன், முத்து ராஜ், பொறியாளர் அணி துணை அமைச்சர் சிவராஜன், கீழப்பாவூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் சிவன் பாண்டியன், பெத்த நாடார்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஜெயராணி, ஒன்றிய கவுன்சிலர் நாக ராஜன், இளைஞரணி கோமு, நிர்வாகிகள் தளபதி முருகேசன், தங்கச்சாமி, முயல், சீதாராமன், செந்தில், காளிமுத்து, மாரி முத்து, மோகன், இளைஞரணி துணை அமைப்பாளர் சிவ குமார், சச்சின், ஜெயக்குமார், ஓவிய ஆசிரியர் ராமர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.