கடையத்தில் பாரதி, காந்தி, விவேகானந்தர் தின விழா
1 min read
Bharathi, Gandhi, Vivekananda Day celebrations at the shop
12.9.2023
தென்காசி மாவட்டம் கடையம் நூல் நிலையத்தில் உள்ள செல்லம்மா பாரதி கற்றல் மையத்தில் பாரதி காந்தி விவேகானந்தர் தின விழா கொண்டாடப்பட்டது.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன், ஆசிரியர் – கலைமகள், பேராசிரியர் முனைவர் சுந்தரம், செயலர் ஸ்ரீ பரம கல்யாணி பள்ளிகள், ஆழ்வார்குறிச்சி, பி.டி.டி. ராஜன், பதிப்பாளர் கலைமகள்,சுரேஷ் குமார், உறுப்பினர் லண்டன் ஐக்கிய ராஜ்ய தமிழ் துறை, கடையம் வாசகர் வட்டத் தலைவர் ஆ.சேது ராமலிங்கம், ஓய்வுப் பெற்ற தலைமை ஆசிரியர் நீலகண்டன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
சேவாலயா நிறுவனர் மற்றும் அறங்காவலர் வா. முரளிதரன் வரவேற்புரை வழங்கி சிறப்பு விருந்தினர்களை வரவேற்றார்.
இந்த நிகழ்ச்சியில் கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன் எழுதிய “தெரிந்த பாரதி தெரியாத விஷயங்கள்” என்ற நூல் வெளியீடு இனிதே நடைபெற்று அவையில் வீற்றிருந்த விருந்தினர்கள் பிரதிகளைப் பெற்றுக் கொண்டனர்.
சிறப்பு விருந்தினர் கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன் பேசுகையில் பாரத மாதாவின் திருவருளினாலேயே முரளிதரன் அவர்களால் செயற்கரிய நற்காரியங்கள் அனைத்தும் சமூக முன்றேத்திற்கு பயனுள்ள வகையில் நடைபெறுகிறது என்று பகிர்ந்து கொண்டார்.
மகாகவியின் பாபநாசம் கட்டுரை அதனோடு பாபநாசம் வழியில் அமைந்த கீழாம்பூர் தொடர்பு பற்றிய நினைவுகளை கூறினார். பாரதியாரை பற்றி புதிய செய்திகளை மாணவர்களிடம் எடுத்துக் கூறினார். மகாத்மா காந்தியின் உண்மை, எளிமை, அகிம்சை மற்றும் விவேகானந்தரின் துணிவு ஆகியவற்றை அனைவரும் எடுத்துக் கொண்டு பின்பற்ற வேண்டும் என்றார். மேலும் முரளிதரனுக்கு மகாத்மா காந்தியின் எளிமையும் விவேகானந்தரின் துணிவும் இருப்பதாக பாராட்டி பேசினார்.
இவ்விழாவினை முன்னிட்டு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு நடத்தப்பட்ட பேச்சுப்போட்டி, கவிதை போட்டி, கட்டுரைப்போட்டி, ஓவியப்போட்டி, வினாடி வினா ஆகிய போட்டிகளில் 25 மாவட்டங்களில் இருந்து 1942 பேர் கலந்து கொண்டனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு விருந்தினர்கள் பரிசளித்து ஊக்கப்படுத்தினர்.
மேலும் போட்டிகள் நடத்தி உறுதுணையாக இருந்த நடுவர்களுக்கு நினைவு பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது.
சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவு பரிசு அளித்து சிறப்பிக்கப்பட்டது முடிவில் ஓய்வுபெற்ற ஆசிரியர், கடையம் கோபால் அனைவருக்கும் நன்றி கூறினார்.