குற்றாலத்தில் பாஜக போராட்டம்; 88 பேர் கைது
1 min read
BJP protest at court; 88 people were arrested
12/9/2023
சனாதன எதிர்ப்பு கருத்தரங்கில்கலந்துகொண்டு சனாதனத்திற்கு எதிராக கருத்து கூறிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கண்டித்தும், அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு பதவி விலக கோரியும்
தென்காசி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில்
குற்றாலத்தில் உள்ள இந்து சமய அறநிலை துறை இணை ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.
முன்னதாக குற்றாலம் பேருந்து நிலையத்திலிருந்து ஊர்வலமாக சென்று இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி செய்த பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் 8 பெண்கள் உட்பட 88 நபர்கள் தென்காசிகாவல் துணை கண்காணிப்பாளர் நாகசங்கர் தலைமையிலான காவல்துறையினர் கைது செய்து குற்றாலம் கலைவாணர் கலையரங்கத்தில் வைக்கப்பட்டனர்
இந்த போராட்டத்திற்கு தென்காசி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் கே.ஏ.ராஜேஷ் ராஜா தலைமை தாங்கினார் மாவட்ட பொதுச் செயலாளர்கள்
பாலகுருநாதன், ராமநாதன், அருள்செல்வன், மாவட்ட பொருளாளர் பாலகிருஷ் ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில் சிறப்பு அழைப்பாளராக
திருநெல்வேலி பாராளு மன்ற பொறுப்பாளர்
நீல முரளியாதவ் கலந்து கொண்டார்.
இந்த போராட்டத்தில் தென்காசி மாவட்ட பாஜக துணைத் தலைவர்கள் தென்காசி முத்துக்குமார், ராதாகிருஷ்ணன் பால்ராஜ்
தென்காசி தெற்கு ஒன்றிய தலைவர் முருகன் தென்காசி தெற்கு ஒன்றிய பார்வையாளர் செந்தூர் பாண்டியன், பாஜக நகரம் மற்றும் ஒன்றிய தலைவர்கள் தென்காசி மந்திரமூர்த்தி, செங்கோட்டை வேம்புராஜ், கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய மாரியப்பன், கடையம் கிழக்கு ரத்தினகுமார் ஆலங்குளம், தெற்கு பண்டரிநாதன்,
கடையநல்லூர் நகர் சுப்பிரமணியன்,
மேல நீலிதநல்லூர் பரமசிவம்ஃ வாசு வடக்கு சோலை ராஜன், வாசு தெற்கு ராம்குமார், சங்கரன்கோவில் தெற்கு சண்முகராஜ், கடையநல்லூர் ஒன்றியம் தர்மர், மற்றும் அணி பிரிவு நிர்வாகிகள்
மகளிர் அணி தலைவி அனிதா செந்தில்குமார்,
பிரச்சார பிரிவு சங்கரநாராயணன், அமைப்பு சாரா தொழிலாளர் பிரிவு வேல்பாண்டி, சமூக ஊடகப்பிரிவு முன்னாள் ராணுவத்தினர் பிரிவு ராமச்சந்திரன், ரங்கராஜ், சமூக ஊடகப்பிரிவு மாவட்ட துணை தலைவர் காளிமுத்து, ஓபிசி மாவட்ட துணைத்தலைவர் மாரிக்கண்ணன், இளைஞரணி மாவட்ட துணை தலைவர் விவேக் குமார், தகவல் மேலாண்மை பிரிவு மாவட்ட துணை தலைவர் முருகன், மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாவட்ட செயலாளர் காளிமுத்து மகளிர் அணி மாவட்ட பொதுச் செயலாளர் மரகதா மாவட்ட பொருளாளர் மகேஸ்வரி சுரண்டை நகர மகளிர் அணி தலைவி சீலாகணேசன் தென்காசி நகர பொதுச்செயலாளர் கோமதி கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய செயற்குழு உறுப்பினர் உமா கீழப்பாவூர் கிழக்கு ஒன்றிய தலைவி ஈஸ்வரி தங்கம் , தென்காசி எல்.ஜி.குத்தாலிங்கம், சங்கரசுப்பிரமணியன், கருப்பசாமி, மேலகரம் மகேஷ்வரன், மற்றும் மாநில மாவட்ட மண்டல் அணி பிரிவு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்