கடையத்தில் ஜெய்ஹிந்த் செண்பகராமன் பிள்ளை படத்திற்கு மரியாதை
1 min read
A tribute to the portrait of Jayhind Senpakaraman Pillai in Kadayam
15.9.2023
ஜெய்ஹிந்த் செண்பகராமன் பிள்ளையின் பிறந்தநாளையொட்டி கடையத்தில் அவரது உருவப் படத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டது.
ஜெய்ஹந்த் செண்பகராமன்
சுதந்திர போரட்டத்தின் போது “ஜெய்ஹிந்த்” என்ற மந்திர கோஷகத்தை எழுப்பியவர் செண்பகராமன் பிள்ளை.
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த இவர் சுதந்திர போராட்ட வீரர். சுதந்திரபோட்டத்தின்போது ஆங்கிலேயர் வசம் இருந்த சென்னை துறைமுகத்தில் எம்டன் கப்பல் தாக்குதல் நடத்தியது அல்லவா? அது இவரது தலையைில் வந்த படைதான்.
ஜெய்ஹிந்த் செண்பகராமனின் 132வது பிறந்தநாள் விழா இன்று ( வெள்ளிக்கிழமை ). அவரது பிறந்தநாள் விழா கடையத்தில் கொண்டாடப்பட்டது. பஸ் நிலையத்தில் அவரது உருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டது. இந்த விழாவில் தோரணமலை பரம்பரை அறங்காவலர் ஆ.செண்பகராமன், கடையம் பாரதி அரிமா சங்க தலைவர் எல்.காளிதாஸ், செங்கோட்டை பிரகாஷ் சாமில் மற்றும் உட் இண்டஸ்டிரிஸ் அதிபர் ஜி.செண்பகராமன், கடையம் திருவள்ளூவர் கழக தலைவர் ஆ. சேதுராமலிங்கம், முத்தமிழ் கலா மன்ற நிர்வாகி இ.கவியரன், அருணாச்சலம் குமரேசன் இந்திரசித்து ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
கடையம் நூலகர் மீனாட்சிசுந்தரம் மற்றும் இளங்கோ, ஆழ்வார்குறிச்சி திருவள்ளுவர் கழக செயலாளர் ஆயில்யன் என்ற மாடசாமி ஆசிரியர் சோமு சண்முகம்சுந்தரம் ஆகியோரும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள். மேலும் விடுதலைப் போராட்ட தியாகி செண்பகராமன் பிள்ளையின் வாழ்க்கை வரலாறு மற்றும் செயற்கரிய செயல்கள் பற்றி பேசினார்கள்.
தோரணமலை முருகன் பக்தர்கள் குழுவைச் சேர்ந்த முருகேசன், ஜீவா, சீனி, பார்த்திபன், பரமசிவன், ராமர், வசிய முருகன், சசிகுமார் பாலமுருகன் உள்பட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். விழாவுக்கு வந்திருந்த அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது-
செங்கோட்டை தொழிலதிபர் செண்பகராமன் தோரணமலை நிர்வாக அறங்காவல செண்பகராமன் ஆகியோர் உலக அளவில் யோகா மற்றும் ஸ்கேட்டிங் ஆகிய போட்டிகளில் பங்கெடுத்து தங்கப்பதக்கம் வென்ற மாணவியர் ரவண சமுத்திரத்தைச் சார்ந்த மிஸ்பா நூருல் ஹபியா, சாஜிதா ஜைனப் ஆகிய இருவருக்கும்., மாநில அளவில் சைக்கிள் போட்டியில் முதல் பரிசு வென்ற மீனாட்சிபுரம் சந்தோஷ் என்பவருக்கும், தேசிய அளவிலான யோகா போட்டியில் பரிசு பெற்ற டோனிஸ்வரன் என்பவருக்கும் கேடயம் மற்றும் பரிசு வழங்கி மரியாதை செய்தார்கள்.
விழா ஏற்பாடுகளை தோரணமலை பரம்பரை அறங்காவலர் ஆ.செண்பகராமன் செய்திருந்தார். சேவாலயா சங்கிலி பூதத்தான்
விழா நிகழ்ச்சிகளைதொகுத்து வழங்கி அனைவருக்கும் நன்றி கூறி சிறப்பித்தார்.