சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்ற உதயநிதி, சேகர் பாபுவிற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு
1 min read
Writ Petition in Supreme Court against Shekhar Babu, Udayanidhi, who participated in Sanatana Abolition Conference
15.9.2023
சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் திமுக அமைச்சர்களான உதயநிதி ஸ்டாலின், சேகர் பாபு ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் உதயநிதி ஸ்டாலின் பேசிய கருத்து மிகப்பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்ட உதயநிதி ஸ்டாலின், சேகர் பாபு ஆகியோருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சென்னையை சேர்ந்த ஜெகன்நாதன் என்பவர் ரிட் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
தமிழக அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர் பாபு ஆகியோர் சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்றது அரசமைப்பு சாசனத்திற்கு முரணானது என அறிவிக்க வேண்டும். சனாதன ஒழிப்பு மாநாட்டின் பின்னணியை கண்டறிய சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.