“மக்களுடன் ஸ்டாலின்” என்ற செயலியை நாளை வெளியிடுகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
1 min read
Chief Minister M.K.Stalin will launch an app called “People with Stalin” tomorrow
16/9/2023
வேலூரில் நாளை தி.மு.க பவள விழாவுடன் கூடிய முப்பெரும் விழா நடைபெற உள்ளது.
இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கட்சியின் பொதுச்செயலாளர் அமைச்சர் துரைமுருகன், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் கட்சி நிர்வாகிகள் அமைச்சர்கள், எம்.எல். ஏ.க்கள் கலந்து கொள்கின்றனர். இதனால் ஆயிரக்கணக்கானோர் விழாவில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக வேலூர் அடுத்த கந்தனேரியில் சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை அருகே பிரம்மாண்ட கோட்டை வடிவிலான மேடை பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. விழாவில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து இன்று ரெயில் மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காட்பாடி விரைந்தார். ரெயில் நிலையத்தில் அவருக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.
முதலமைச்சர் இன்று இரவு வேலூர் அரசு சுற்றுலா மாளிகை அல்லது தனியார் ஓட்டலில் தங்குகிறார். நாளை காலை முதல் பட்டிமன்றம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது. மாலையில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு விழா பேரூரை ஆற்றுகிறார். இந்நிலையில், நாளை வேலூரில் நடைபெறும் முப்பெரும் விழாவில் மக்களுடன் ஸ்டாலின் என்ற செயலியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிடுகிறார். முதலமைச்சரின் கள செயல்பாடுகளை அறிந்துகொள்ளும் வகையிலும், எல்லாருக்கும் எல்லாமும் கிடைத்தாக வேண்டும் என்ற நோக்கிலும் இச்செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.