தொடர் விடுமுறையால் குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம்
1 min read
Tourists throng Kurdalam waterfalls due to continuous holiday
16.9.2023
தொடர் விடுமுறையையொட்டி குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.
குற்றாலம்
தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த சாரல் மழை காரணமாக குற்றாலத்தில் முக்கிய அருவிகளாக விளங்கி வரும் பழைய குற்றாலம், ஐந்தருவி, மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் காலை முதல் மிதமான அளவில் தண்ணீர் விழுந்து வருகிறது.
கடந்த சில நாட்களாகவே அருவிகளில் தண்ணீர் கொட்டி வரும் நிலையில் சுற்றுலா பயணிகள் கூட்டம் குறைவாகவே இருந்தது. இந்நிலையில் இன்றும், நாளையும் வார விடுமுறை நாட்கள் என்பதாலும், நாளை மறுநாள் விநாயகர் சதுர்த்தி விடுமுறை தினம் என்பதாலும் குற்றாலத்திற்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.
அனைத்து அருவிகளிலும் குளிப்பதற்காக இன்று காலை முதலே வெளியூர் சுற்றுலா பயணிகளின் கூட்டம் காலை முதலே அதிகரித்து காணப்பட்டது. மெயின் அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து குளித்து மகிழ்ந்து வருகின்றனர். மேலும் சுற்றுலா பயணிகளின் கூட்ட நெரிசல்களை கட்டுப்படுத்த போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.