கனடா தூதரகத்தின் உயர்அதிகாரியை வெளியேற்ற இந்தியா அதிரடி உத்தரவு
1 min read
India orders action to expel top Canadian embassy official
19.9.2023
கனடாவில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியாவில் கடந்த ஜூன் மாதம் காலிஸ்தான் தலைவர் ஹர்தீப் சிங் நிஜர் என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு உள்ளது என கனடா குற்றம்சாட்டியுள்ளது.
அதனைத் தொடர்ந்து இந்திய தூதரகத்தின் உயர் அதிகாரியை வெளியேற கனடா அரசு உத்தரவிட்டது.
கனடாவின் இந்த உத்தரவையடுத்து, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், இந்தியாவுக்கான கனடாவின் தூதருக்கு சம்மன் அனுப்பியது. இதனைத் தொடர்ந்து அவரிடம், கனடாவில் ராஜதந்திர அளவிலான மூத்த தூதரக அதிகாரி இன்னும் ஐந்து நாட்களில் இந்தியாவில் இருந்து வெளியேற வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளது.
நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுதல், இந்தியாவுக்கு எதிரான செயல்பாடுகளில் அவர்களுடைய ஈடுபாடு ஆகியவை குறித்து தங்களது கவலையை தெரிவித்த இந்தியா, இந்த முடிவை எடுத்துள்ளது.