“ஓபிசி பெண்களுக்கான ஒதுக்கீடு இல்லாதது ஏமாற்றம்” – மகளிர் மசோதா குறித்து உமா பாரதி வருத்தம்
1 min read
“No reservation for OBC women disappointing” – Uma Bharti upset over Women’s Bill
20/9/2023
நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவில் இதர பிற்படுத்தப்பட்டட பிரிவுக்கான (ஓபிசி) இட ஒதுக்கீடு இல்லாதது ஏமாற்றம் அளிப்பதாக மூத்த பாஜக தலைவர் உமா பாரதி தெரிவித்துள்ளார்.
மகளிர் இடஒதுக்கீடு
பாஜக தலைமையிலான மத்திய அரசு செவ்வாய்க்கிழமை மக்களவையில் சட்டத்திருத்த மசோதாவை தாக்கல் செய்தது. அதில், பெண்களுக்கான இட ஒதுக்கீடு 15 ஆண்டுகள் நடைமுறையில் இருக்கும், பெண்களுக்கான மூன்றில் ஒரு பங்கு இடஒக்கீட்டில் பட்டியல் மற்றும் பழங்குடியினருக்கான இட ஒதுக்கீடும் அடங்கியிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், இதுகுறித்து பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான உமா பாரதி செய்தி நிறுவனம் ஒன்றிடம் பேசுகையில் கூறியதாவது:-
மகளிருக்கான இட ஒதுக்கீடு மசோதா அறிமுகப்படுத்தப்பட்டதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். ஆனால் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு பெண்களுக்கான இட ஒத்துக்கீடு இல்லாமல் இருப்பது வருத்தமளிக்கிறது. நாம் ஓபிசி பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டை உறுதி செய்யாமல் போனால் அது பாஜக மீது பெண்களுக்கு இருக்கும் நம்பிக்கையை உடைத்துவிடும்.
பிரதமர் பார்த்துக்கொள்வார் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. செவ்வாய்க்கிழமை காலையில் பிரதமருக்கு கடிதம் எழுதிய நான், மசோதா தாக்கல் செய்யப்படும் வரை அமைதியாக இருந்தேன். மசோதாவில் ஓபிசியினருக்கான இடஒதுக்கிடு இல்லாததால் ஏமாற்றமடைந்தேன்.
பிற்படுத்த பிரிவு பெண்களுக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்பு வழங்கப்படாதது ஏமாற்றம் அளிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.