தமிழகம் முழுவதும் 30 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை
1 min read
Enforcement department raided 30 places across Tamil Nadu
26.9.2023
தமிழகம் முழுவதும் 30 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.
அமலாக்கத்துறை சோதனை
ரியல் எஸ்டேட் மூலமாக சம்பாதித்த பணத்தை வெளிநாட்டில் சட்டவிரோத பணபரிமாற்றத்தில் ஈடுபட்டிருப்பதாக வந்த தகவலையடுத்து அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை ஓம்ஆர் உள்பட தமிழகம் முழுவதும் ரியல் எஸ்டேட் தொழிலதிபர்களுக்கு சொந்தமான இடங்களில் இன்று அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.. சென்னை தி.நகரில் உள்ள ரியல் எஸ்டேட் தொழிலதிபர் சண்முகம் வீட்டில் 5 அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
வீடு பூட்டி இருந்ததால் அமலாக்கத்துறை அதிகாரிகள் தரைதளத்தில் காத்திருந்து பின்னர் சோதனை மேற்கொண்டனர்.