தோரணமலையில் காந்தி ஜெயந்தியையொட்டடி சிலம்பபோட்டி
1 min read
Gandhi Jayanti Ottadi Chilambapoti at Thoranamalai
2.10.2023
தோரணமலையில் காந்தி ஜெயந்தி மற்றும் காமராஜர் நினைவுநாளையொட்டி சிலம்பப் போட்டி நடந்தது.
தோரணமலை
தோரணமலை
தென்காசி மாவட்டம் கடையம் அருகே தோரணமலை முருகன்கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். அகத்தியர், தேரைவர் வாசம் செய்த ஸ்தலம் என்ற பெருமை இக்குகோவிலுக்கு உண்டு. இங்கு தினமும் பக்தர்கள் அதிக அளவில் வந்த வண்ணம் உள்ளனர். குறிப்பாக தமிழ்மாத கடைசி வெள்ளி, பவுர்ணமி கிரிவலம் மற்றும் விழாக்காலங்களில் கட்டுக்கடங்காத கூட்டம் வரும்.
இக்கோவிலில் தினமும் மதியம் அன்னதானம் வழங்கப்படுகிறது. ஞாயிற்று, கடைசிவெள்ளி, பவுர்ணமி நாளில் காலையில் சிற்றுண்டியும் வழங்கப்படுகிறது. மாலை 3 மணி வரை மலையே பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.
தோரணமலையில் இறைபணியோடு பல்வேறு சமூகப்பணிகளும் நடந்து வருகிறது. மாணவர்களை ஊக்குவிக்க வேலை வாய்ப்பு பயிற்சி மற்றும் போட்டிகள் நடத்தப்படுகிறது. அந்த வகையில் காந்தி ஜெயந்தி மற்றும் காமராஜர் நினைவு தினத்தை யொட்டி இன்று ( திங்கட்கிழமை) சிலம்ப போட்டி நடந்தது.
மகாத்மா காந்தியின் 154வது ஜெயந்தியை கொண்டாடும் வகையிலும் காமராஜரின் 45-வது நினைவு நாளை போற்றும் வகையிலும் தோரணமலை அடிவாரத்தில் காந்தி காமராஜ் படங்கள் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. மாணவ-மாணவிகள் மற்றும் பக்தாக்ள் அந்த திருவுருவ படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
பின்னர் சிலம்பு பாப்பையா சிலம்ப பயிற்சி மாணவர்களின் சிலம்பப் போட்டி நடைபெற்றது. போட்டியில் கலந்து கொண்ட மாணவ மாணவியர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
வந்திருந்த அனைவருக்கும் பிரசாதங்கள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை தோரணமலை கோயில் பரம்பரை அறங்காவலர் ஆ.செண்பகராமன் செய்திருந்தார்
மாலையில் ஆ.செண்பகராமனின் சொந்த ஊரான முத்துமாலைபுரத்தில் அவர் சார்பில் அமைக்கப்பட்டுள்ள விளையாட்டு மைதானத்தில் அங்குள்ள சிறுவர்-சிறுமிகளுக்கு சிலம்ப பயிற்சியும் அளிக்கப்பட்டது.