மின்கம்பி அறுந்து விழுந்ததில் மோட்டார் சைக்கிளில் சென்ற 2 தொழிலாளர்கள் பலி
1 min read
2 laborers on a motorcycle were killed when the power line fell
6.10.2023
கும்மிடிப்பூண்டி அருகே சாலையில் அறுந்து கிடந்த உயர் மின்னழுத்த கம்பி உரசியதில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
மின்சாரம் தாக்கி பலி
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள சின்னபுள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ், பூவலம்பேடு பகுதியை சேர்ந்தவர் ராவனைய்யா. இவர்கள் இருவரும் கூட்டாக மர வியாபாரம் செய்து வந்தனர்
இந்நிலையில் இன்று காலை தொழில் சம்பந்தமாக தங்களது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.
அவர்கள் யானைப்பாளையம் காட்டு பகுதியில் சென்று கொண்டிருந்தபோது அறுந்து கிடந்த உயர் மின்னழுத்த கம்பி இரு சக்கர வாகனத்தில் உரசியதாக கூறப்படுகிறது. இதில் இருவர் மீதும் மின்சாரம் பாய்ந்துள்ளது.
இதில் ராவனைய்யா சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தார். ரமேஷ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.