உவரி அருகே கடல் அரிப்பால் சரிந்து விழுந்த அரசு கட்டிடம்
1 min read
A government building collapsed due to sea erosion near Uvari
7.10.2023
நெல்லை மாவட்ட கடற்கரை பகுதியில் கடந்த சில நாட்களாக கடல் கொந்தளிப்பு அதிகமாக உள்ளது. உவரி, கூட்டப்பனை, கூடுதாழை கிராமங்களில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதன் காரணமாக கூட்டப்பனை மீனவர் கிராமத்தில், அரசால் கடற்கரையில் கட்டப்பட்டு இருந்த மீன் ஏலக்கூடம் மற்றும் வலைபின்னும் கூடத்தில் கடல்நீர் புகுந்தது. இதனால் அந்த கட்டிடம் சரிந்து விழுந்தது. இதுகுறித்து அப்பகுதி மீனவர்கள் மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் வருவாய் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு அதிகாரிகள் விரைந்து சென்று ஆய்வு செய்து சேத விவரம் குறித்து விசாரித்து வருகின்றனர்.