இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையேயான போருக்கு அல் அக்ஸா மசூதி காரணம்
1 min read
Al Aqsa Mosque is the cause of the Israeli-Palestinian war
8.10.2023
ஹமாஸின் ராக்கெட் தாக்குதல்களுக்கு பதிலடியாக இஸ்ரேல் ராணுவ நடவடிக்கைகளை மீண்டும் தொடங்கியது.
ராக்கெட் தாக்குதல்கள் இஸ்ரேலுக்கு புதிதல்ல.
இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே 1948-ம் ஆண்டில் இருந்தே போர் நடந்து வருகிறது. 1948-ல் பாலஸ்தீனத்திலிருந்து பிரித்தானியர் வெளியேறிய பிறகு, இஸ்ரேலும் அரபு நாடுகளும் போரைத் தொடங்கின. 1949-ல் ஜனவரி 20 அன்று இஸ்ரேல், அரபு நாடுகளுடன் போர் நிறுத்தத்தை அறிவித்தபோது போர் முடிவுக்கு வந்தது.
1967-ல் இஸ்ரேலுக்கும் எகிப்திய-ஜோர்டானிய-சிரியாக் கூட்டணிக்கும் இடையிலான 6 நாள் போரின் விளைவாக மேற்குக் கரை, காசா பகுதி, சினாய் மற்றும் கோலன் குன்றுகளை இஸ்ரேல் கைப்பற்றியது.
1973-ம் ஆண்டு எகிப்து மற்றும் சிரியாவினால் இஸ்ரேல் மீது திடீர் தாக்குதல் நடைபெற்றது. யோம் கிக்கர் போர் என்று அழைக்கப்படும் சண்டை, போருக்கு முந்தைய நிலையைத் தக்கவைக்க போர் நிறுத்தத்துடன் முடிவுக்கு வந்தது.
2008-ம் ஆண்டில் ஹமாஸின் ராக்கெட் தாக்குதல்களை எதிர்கொள்ள காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவ நடவடிக்கை எடுத்தது காசா போர் என்று அழைக்கப்படுகிறது. 2009-ல் போர் நிறுத்தம்.
2014ல் ஹமாஸின் ராக்கெட் தாக்குதல்களுக்கு பதிலடியாக இஸ்ரேல் ராணுவ நடவடிக்கைகளை மீண்டும் தொடங்கியது.
2021ம் வருடம் ஜெருசலேம் மற்றும் மேற்குக் கரையில் இஸ்ரேலிய போலீசாரும் பாலஸ்தீனிய எதிர்ப்பாளர்களும் மோதிக்கொண்டனர். இந்த மோதல் காஸா பகுதிக்கும் பரவியதையடுத்து, ஹமாசுக்கு எதிராக இஸ்ரேல் ராணுவ நடவடிக்கைகளைத் தொடங்கியது.
இந்த நிலையில் தற்போது மீண்டும் போர் வெடித்துள்ளது. இதற்கு மிக முக்கியமாக கருதப்படுவது அல்-அக்ஸா மசூதி தான். இந்தப் பகுதியில் இஸ்ரேல் காட்டிய அதீத ஆர்வம் தான் தற்போதைய தாக்குதலுக்கு காரணம் என சொல்லப்படுகிறது. கடந்த ஒரு வருடத்தில் இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் பென் கெவிர் 3 முறை இங்கு வந்து சென்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஹமாஸ், இதனை சர்வதேச கவனத்திற்கு கொண்டு செல்ல தாக்குதலை நடத்தியிருக்கலாம் என கருதப்படுகிறது.
2005 போர் நிறுத்தத்திற்குப் பிறகு 2014-ல் கடுமையான சண்டை நடந்தது. அதன் பிறகு, 3 ஆண்டுகளாக குறிப்பிடத்தக்க ராக்கெட் தாக்குதல் எதுவும் இல்லை.
ஆனால், கடந்த 2 ஆண்டுகளாக இந்தப் பிரச்சனை மீண்டும் தீவிரமடைந்தது. மே 2021 இல், அல்-அக்ஸா மசூதி பகுதியில் இஸ்ரேலியர்களுக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையிலான மோதல்கள் ஹமாஸுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே ராணுவப் போருக்கு வழிவகுத்தது. கடந்த ஆண்டு இஸ்ரேல் ராணுவத்துடனான மோதலில் 151 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். தற்போது பிரச்சனை பழைய நிலைக்கு திரும்பியுள்ளது.
ராக்கெட் தாக்குதல்கள் இஸ்ரேலுக்கு புதிதல்ல. வான் கவசங்கள் மற்றும் வெடிகுண்டு தங்குமிடங்கள் பொதுவாக ராக்கெட்டுகளுக்கு எதிராக பயனுள்ளதாக இருக்கும். இருப்பினும், இப்போது நேரடியாக எல்லையைத் தாண்டி நகரங்களின் தெருக்களில் துப்பாக்கிச் சூடு நடத்தும் தாக்குதல் உள்ளது.