தெலுங்கானா 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு
1 min read
Telangana 5 State Legislative Assembly Election Date Notification
9.10.2023-
தெலுங்கானா, ராஜஸ்தான் உள்பட 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
5 மாநில தேர்தல்
மிசோரம் மாநில சட்டசபையின் பதவிக்காலம் டிசம்பர் 17ம் தேதியுடன் நிறைவடைகிறது. அதேபோல், தெலங்கானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஷ்கார் மாநிலங்களின் சட்டசபை பதவிக்காலம் வரும் ஜனவரி மாதத்துடன் நிறைவடைகிறது.
இந்நிலையில், சட்டசபை பதவிக்காலம் நிறைவடைய உள்ள 5 மாநிலங்களின் தேர்தல் தேதியை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் இன்று அறிவித்தார்.
அதன்படி, மிசோரம் மாநிலத்திற்கு நவம்பர் 7ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சத்தீஷ்கார் மாநிலத்திற்கு நவம்பர் 7 மற்றும் 17ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், மத்தியபிரதேசத்திற்கு நவம்பர் 17ம் தேதியும், ராஜஸ்தானுக்கு நவம்பர் 23ம் தேதியும், தெலங்கானாவுக்கு நவம்பர் 30ம் தேதியும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. 5 மாநில தேர்தலில் பதிவான வாக்குகள் டிசம்பர் 3ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
இம்முறை சத்தீஸ்கரில் மட்டும் 2 கட்டங்களாகவும் பிற 4 மாநிலங்களில் ஒரே கட்டமாகவும் தேர்தல் நடைபெறவுள்ளது.
5 மாநிலங்களிலும் மொத்தம் உள்ள 16.1 கோடி வாக்காளர்களில் 60.2 லட்சம் முதல் முறை வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.
மிசோரம் – நவம்பர் 7
சத்தீஸ்கர் (2 கட்டங்கள்) – நவம்பர் 7 மற்றும் நவம்பர் 17
மத்திய பிரதேசம் – நவம்பர் 17
ராஜஸ்தான் – நவம்பர் 23
தெலுங்கானா – நவம்பர் 30
அனைத்து மாநிலங்களிலும் தேர்தல் முடிவுகள் டிசம்பர் 3 அன்று வெளியிடப்படுகிறது.
5 மாநிலங்களிலும் உள்ள தற்போதைய சட்டசபை நிலவரம் வருமாறு:-
தெலுங்கானா – மொத்த இடங்கள்: 119 – ஆளும் கட்சி: பாரத் ராஷ்ட்ரிய சமிதி
மத்திய பிரதேசம் – மொத்த இடங்கள்: 230 – ஆளும் கட்சி: பா.ஜ.க.
சத்தீஸ்கர் – மொத்த இடங்கள்: 90 – ஆளும் கட்சி: காங்கிரஸ்
ராஜஸ்தான் – மொத்த இடங்கள்: 200 – ஆளும் கட்சி: காங்கிரஸ்
மிசோரம் – மொத்த இடங்கள்: 40 – ஆளும் கட்சி: மிசோ தேசிய முன்னணி
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள 5 மாநிலங்களிலும் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன.
==
ஆந்திராவில் தனியார் தங்க சுரங்கம் பயன்பாட்டுக்கு வருகிறது
திருப்பதி, அக்.10-
ஆந்திரா மாநிலம், கர்னூல் மாவட்டம், ஜோனகிரி, எர்ரகுடி, பகதி ராய் உள்ளிட்ட பகுதிகளில் டெக்கான் கோல்ட் மைன்ஸ் என்ற பெயரில் ஜியோ மைசூர் சர்வீஸ் இந்தியா லிமிடெட் என்ற தனியார் நிறுவனம் தங்க சுரங்கங்களை அமைத்து வருகிறது.
இந்த தங்க சுரங்கங்கள் இந்தியாவின் முதல் பெரிய தனியார் தங்க சுரங்கம் ஆகும். அடுத்த ஆண்டு அக்டோபர், நவம்பருக்குள் தங்க சுரங்கங்கள் உற்பத்தியை தொடங்கும் என நிர்வாக இயக்குனர் ஹனுமா பிரசாத் தெரிவித்தார்.
சோதனை அடிப்படையில் இந்த தங்க சுரங்கங்கள் மூலம் மாதத்திற்கு ஒரு கிலோ தங்கம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
தங்க சுரங்கங்கள் முழுமையான உற்பத்தியை தொடங்கும் போது ஆண்டுக்கு 750 கிலோ எடையுள்ள தங்கத்தை உற்பத்தி செய்யும்.
தங்க சுரங்கங்கள் அமைக்கும் பணி கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதற்காக அந்நிறுவனம் ரூ.200 கோடியை முதலீடு செய்து உள்ளன என தெரிவித்தனர்.