சென்னை அருகே என்கவுன்ட்டரில் 2 ரவுடிகள் சுட்டுக்கொலை
1 min read
2 raiders shot dead in an encounter near Chennai
12.10.2023
சென்னை அருகே என்கவுன்ட்டரில் 2 ரவுடிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
என்கவுன்ட்டர்
சென்னை சோழவரத்தை அடுத்த பூதூர் மாரம்பேடு பகுதியில் போலீசார் நடத்திய என்கவுன்ட்டரில் ரவுடி முத்து சரவணன் சுட்டுக் கொல்லப்பட்டார். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முத்து சரவணனை போலீசார் பிடிக்க முயன்றபோது அவர்களை தாக்கிவிட்டு ரவுடி முத்து சரவணன் தப்பிச் செல்ல முயன்றார். இதனால், போலீசார் தற்காப்புக்காக தனது கையில் வைத்து இருந்த துப்பாக்கியால் ரவுடியை சுட்டனர். இதில் உடலில் குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே முத்து சரவணன் உயிரிழந்தார்.
என்கவுன்ட்டரில் காயமடைந்த மற்றொரு ரவுடி சதீஷ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். ரவுடிகள் தாக்கியதில் 3 காவலர்கள் காயம் அடைந்ததாக கூறப்படுகிறது. காயம் அடைந்த காவலர்கள் ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
என்கவுன்ட்டரில் கொல்லப்பட்ட முத்து சரவணன், சதிஷ் ஆகியோர் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. சுட்டுக்கொல்லப்பட்ட முத்து சரவணன் மீது 7 கொலை வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.