இலஞ்சி ஒவிய ஆசிரியருக்கு கலை ஆசிரியர் விருது-அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார்
1 min read
Art Teacher Award-Minister M. P. Saminathan presented Ilanchi Ovia author
14.10.2023
தென்காசி மாவட்டம், இலஞ்சி இராமசுவாமி பிள்ளை மேல்நிலைப் பள்ளி ஓவிய ஆசிரியர் ம . கணேசனுக்கு சிறந்த கலை ஆசிரியர் விருதை தமிழக தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு. பெ. சாமிநாதன் வழங்கி பாராட்டினார்.
தமிழக அரசின் கலை பண்பாட்டுத் துறை சார்பில் ஆண்டுதோறும் கலைத்துறையில் சிறந்த சேவை செய்தோரைப் பாராட்டி கலைச்செம்மல் மற்றும் சிறந்த கலை ஆசிரியர் விருது வழங்கப்பட்டு வருகிறது.
இவ்வாண்டிற்கான விருது வழங்கும் விழா கலை பண்பாட்டு துறை தலைமை அலுவலகம் சென்னையில் வைத்து நடைபெற்றது.
இவ் விழாவிற்கு அரசு முதன்மை செயலாளர் மணிவாசன் தலைமை தாங்கினார். இயக்குநர் காந்தி வரவேற்புரை நல்கினார். தமிழக தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு. பெ. சாமிநாதன் இலஞ்சி இராமசுவாமி பிள்ளை மேல்நிலைப் பள்ளி ஓவிய ஆசிரியர் ம . கணேசனுக்கு சிறந்த கலை ஆசிரியர் விருதும் ரொக்கப் பரிசாக ரூபாய் பத்தாயிரமும் வழங்கி பாராட்டினார்.
விருது பெற்ற ஆசிரியருக்கு பள்ளிச் செயலாளர் . ஐ.சி. சண்முக வேலாயுதம் தலைமையில் பாராட்டு விழா நடைபெற்றது. பள்ளித்
தலைமை ஆசிரியர் ஆறுமுகம் விழாவிற்கான ஏற்பாடுகளைச் செய்து வரவேற்றார். ஆசிரியர் ஐயப்பன் வாழ்த்து கவிதை வாசித்தார். மாணவி நிலோபர் தலைமையிலான குழுவினர் ஆசிரியருக்கு நன்றி பாராட்டினர்.
தென்காசி மாவட்ட அரசு மருத்துவமனை மனநல மருத்துவர் நிர்மல்குமார் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மாணவர்களுக்கு மனநலம் பேண ஆலோசனை வழங்கி போட்டிகளில் வெற்றி பெற்றோருக்கு பரிசு , பாராட்டு சான்று வழங்கி வாழ்த்தினார் .
இந்த நிகழ்ச்சியை நல்லாசிரியர் சுரேஷ்குமார் தொகுத்து வழங்கினார். நிகழ்வில் மாணவர்கள் , ஆசிரியர்கள் அம்பல வாணன் உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர்.
ஓவியஆசிரியர் கணேசன் ஏற்புரை நிகழ்த்தினார். முடிவில் ஆசிரியர் கற்பகம் அனைவருக்கும் நன்றி கூறினார்