சென்னையில் திமுக மகளிர் உரிமை மாநாடு – இந்திய கூட்டணியின் முன்னணி தலைவர்கள் பங்கேற்பு
1 min read
DMK Women’s Rights Conference in Chennai – Top Leaders of All India Participation
14.10.2023
சென்னையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மகளிரணி நடத்தும் மகளிர் உரிமை மாநாடு நடந்தது. இதில், தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. முன்னிலை வைகித்தார்.
இந்த மாநாட்டில் “இந்தியா” கூட்டணியை சேர்ந்த முன்னணி தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். குறிப்பாக, இந்த மாநாட்டில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரியும் மக்கள் ஜனநாயக கட்சி தலைவருமான மெகபூபா முப்தி, ஐக்கிய ஜனதாதள தேசிய நிர்வாக குழு உறுப்பினரும் பீகார் மாநில மந்திரியுமான லெஷிசிங், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினர் சுபாஷினி அலி, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் நிர்வாக குழு உறுப்பினர் ஆனிராஜா, ஆம் ஆத்மி கட்சி தேசிய நிர்வாக குழு உறுப்பினர் ராக்கி பிட்லன், திரிணாமுல் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுஷ்மிதா தேவ், சமாஜ்வாடி எம்.பி. டிம்பிள் யாதவ், தேசியவாத காங்கிரஸ் கட்சி செயல் தலைவர் சுப்ரியா சுலே ஆகியோர் பங்கேற்று உரையாற்றுகிறார்கள்.
மாநாட்டில் நிறைவாக சோனியா காந்தி விழா பேரூரையாற்றுகிறார்.
இந்நிலையில், மாநாட்டில் மகளிர் உரிமை மாநாட்டில் தேசியநாத காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் சுப்ரியா சுலே உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில்,” மொழிக்கும், சமூக நீதிக்கும் பிரச்சினை என்றால் திமுக குரல் கொடுக்கும். மக்கள் பிரச்சினைக்காக முதலில் போராடும் கட்சி திமுக. பிரச்சினைகளுக்காக பாராளுமன்றத்திலும் திமுகவின் குரல் ஒலிக்கும். மொழியால் ஒன்றிணைந்தவர்கள் தமிழர்கள்” என்று குறிப்பிட்டார்.
பிரியங்கா
கூட்டத்தில் காங்.,சார்பில் பேசிய பிரியங்கா, நீங்கள் தான் என் தாய் .நீங்கள் தான் என் சகோதரி என தமிழில் பேச்சை துவக்கினார் பிரியங்கா, பெண் ஏன் இன்னும் அடிமையாக இருக்கிறார் என்ற கேள்வி தற்போதும் நீடிக்கிறது. பெண்களின் சக்தியை அரசியல் கட்சிகள் உணர துவங்கி உள்ளன.பெண்களை அடிமைப்படுத்தும் எந்த சக்தியையும் எந்த அமைப்பையும் ஏற்கமாட்டோம். இந்திய பெண்கள் இனியும் தங்கள் பலத்தை வீணடிக்க விரும்பவில்லை என்றார்
தொடர்ந்து தி.மு.க.,வின் கனிமொழி எம்.பி., பேசியதாவது:-
அறிவொளி பெற்ற தீபங்களாக இந்த மாநாட்டில் பெண்கள் கலந்து கொண்டு உள்ளனர். இந்தியாவில் முதன்முறையாக காவல்துறையில் தமிழகத்தில் தான் பெண்களுக்கு வாய்ப்பு அளி்க்கப்பட்டது.மகளிர் முன்னேற்றத்திற்கான உரிமைத்தொகை வழங்கப்படுகிறது. 11 பெண் மேயர்கள் உள்ள மாநிலம் தமிழ்நாடு மகளிர் உரிமை மாநாட்டிற்கு நூற்றாண்டு கால வரலாறு உள்ளது. படிக்கும் ஆர்வமுள்ள பெண்களுக்கு தி.மு.க.,அரசு நிதி கொடுத்து உதவி செய்து வருகிறது. மத்திய அரசின் கொள்கை முடிவில் பெண்களுக்கு பங்கில்லை
இவ்வாறு அவர் பேசினார்.
மாற்றத்துக்கான காற்று நம்மை நோக்கி வீச துவங்கி இருப்பதை உணர்கிறோம். என மா.கம்.யூகட்சியை சேர்ந்த சுபாஷினி அலி பேசினார்.
சோனியா
இதில் காங்.,மூத்த தலைவர் சோனியாசகோதர சகோதரிகளே வணக்கம் என தமிழில் கூறி உரையை துவக்கினார் .
அவர் சோனியா, பேசியதாவது:-
மாபெரும்தலைவரின் தூற்றாண்டு விழாவிற்கு என்னை அழைத்ததற்கு நன்றி நம்முடைய போராட்டத்தில் இன்னும் நீண்ட நெடிய தூரம் பயணிக்க வேண்டி உள்ளது. இந்திய பெண்கள் இன்று பல துறைகளில்ஜொலித்து வருகின்றனர். பொருளாதாரத்திலும் அரசியலிலும் பெண்களுக்கு உரிய பங்கை வழங்க காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது.
ஒரு பெண் படித்தால் அந்த குடும்பமே படித்தது போல் ஆகும் என நேரு கூறினார்.பெண்களின் முன்னேற்றத்திற்காக சுதந்திர போராட்டத்தின் போதே பாடுபட்டது காங்கிரஸ் பெண்களுக்கு அதிகாரம் அளித்தால் நாடே வலிமை பெறும். மகளிர் 33 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு முன்னோடி ராஜிவ். அவர் தான் இந்த சட்டத்தை முதலில் கொண்டு வந்தார். வறுமைய ஒழிக்க வேண்டும் என்பதற்காக தொடர்ந்து பாடுபட்டார் இந்திரா. பெண் எவ்வளவு வலிமையாக நாட்டை ஆள முடியும் என்பதையும் காட்டியவர் இந்திரா .
மகளிர் முன்னேற்றத்தற்கான திட்டங்களால் தமிழகத்தை இந்தியாவே இன்று கொண்டாடுகிறது. மகளிர் திட்ட ஒதுக்கீட்டில் தற்போது தெளிவு இல்லாத நிலை உள்ளது. இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் தான் அவை அமலாகும். காங்., மற்றும் கூட்டணி கட்சிகளின் தொடர் வலியுறுத்தலால் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேறி உள்ளது.
அரசு துறைகளி்ல் இன்று பெண்களின் பங்கு அதிகரித்து உள்ளது. கலாச்சார விலங்குகளை மீறி இந்தியாவை பெருமை அடைய செய்தவர்கள் பெண்கள். 1973ம் ஆண்டிலேயே பெண்களுக்குகாவல் துறையில் இட ஒதுக்கிட்டை உறுதி செய்தவர் கருணாநிதி. தமிழக அரசின் பல்வேறு திட்டங்களால் பேறு கால மரணங்கள் குறைந்துள்ளன. பெண்களின் சமத்துவத்தை நிதர்சனமாக்குவதற்கு இண்டி யா கூட்டணி உரிய நடவடிக்கை மேற்கொள்ளும். வெற்றி நமதே நன்றி வணக்கம்
இவ்வாறு தமிழில் கூறி உரையை முடித்தார் சோனியா.