14 வயது சிறுமியை தாயாக்கிய 56 வயது தொழிலாளி, போக்சோ சட்டத்தில் கைது
1 min read
56-year-old laborer arrested under POCSO Act for mothering 14-year-old girl
15.10.2023
கேரளாவில் 14 வயது சிறுமியை தாயாக்கிய 56 வயது முதியவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
கேரளாவின் வயநாடு மாவட்டத்தை சேர்ந்த 14 வயது சிறுமி வயிறு வலிப்பதாக பெற்றோரிடம் கூறினார். இதனைத்தொடர்ந்து அவரை ஆஸ்பத்திரிக்கு பெற்றோர் அழைத்துச்சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், சிறுமிக்கு வயிற்று வலி அல்ல என்றும் அது பிரசவ வலி என்றும் கூறினர். இதனை கேட்டு சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இதற்கிடையில் சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்தது.
தொடர்ந்து சிறுமியிடம் விசாரித்தபோது, அவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்த 56 வயது தொழிலாளி தான் இதற்கு காரணம் என தெரியவந்தது. அவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.