June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

காசா மக்களுக்கு மோடி ஆதரவாக இருக்க வேண்டும் என ஒவைசி கூறுகிறார்

1 min read

Owaisi says Modi should support people of Gaza

16.10.2023
இஸ்ரேல் பிரதமர் ஒரு ‘பேய்’ என்றும், காசா மக்களுக்கு பிரதமர் மோடி ஆதரவாக இருக்க வேண்டும் என்றும் ஓவைசி கூறினார்.

ஓவைசி

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை ‘பேய்’ என்று ஏ.ஐ.எம் ஐ.எம் தலைவர் ஓவைசி கடுமையாக விமர்சனம் செய்தார். அவர் கூறியதாவது:-
பாலஸ்தீனியர்களுக்கு எதிராக நடத்தப்படும் அட்டூழியங்களைத் தடுத்து நிறுத்துமாறு பிரதமர் மோடியிடம் நான் வேண்டுகோள் விடுக்க விரும்புகிறேன்.
பாலஸ்தீன பிரச்சனை என்பது முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல, மனிதாபிமானப் பிரசனை. எனவே, காசா மக்களுக்கு ஆதரவாக ஒற்றுமை காட்டுமாறு பிரதமரை கேட்டுக் கொள்கிறேன். நெதன்யாகு ஒரு பேய், கொடுங்கோலன், போர்க் குற்றவாளி. காசாவில் 10 லட்சம் பேர் வீட்டை இழந்துள்ளனர்.

உலகமே இதைப் பார்த்து மவுனம் காக்கிறது. காசாவின் இந்த ஏழைகள் உங்களுக்கு என்ன தீங்கு செய்தார்கள்? இந்த விவகாரத்தில் ஒரு தலைப்பட்சமான தகவல் வெளியிடுகின்றனர்.

கடந்த 70 ஆண்டுகளாக இஸ்ரேல் ஆக்கிரமிப்பாளராக இருந்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.