இஸ்ரேலில் இருந்து 286 இந்திய பயணிகளுடன் ஐந்தாவது விமானம் டெல்லி வந்தது
1 min read
A fifth flight from Israel arrived in Delhi with 286 Indian passengers
18.10.2023
இஸ்ரேலில் இருந்து 286 இந்திய பயணிகள் மற்றும் 18 நேபாள குடிமக்களுடன் ஐந்தாவது விமானம் டெல்லி வந்தது
இஸ்ரேல்
இஸ்ரேல் – ஹமாஸ் ஆயுதக்குழு இடையேயான போர் இன்று 9ம் நாளாக நடைபெற்றது. இந்த போரால் இஸ்ரேலில் பல இந்தியர்கள் சிக்கிக்கொண்டனர். அவர்களை மீட்க மத்திய அரசு தீவிர முயற்சி எடுத்து வந்தது. இதனிடையே, இஸ்ரேலில் சிக்கித்தவிக்கும் இந்தியர்களை மீட்க ஆபரேஷன் அஜய் என்ற திட்டத்தை மத்திய அரசு தொடங்கியது. அதன்படி, நான்கு கட்டங்களாக இஸ்ரேலில் இருந்து இந்தியர்கள் விமானம் மூலம் மீட்கப்பட்டனர்.
இந்நிலையில் இஸ்ரேலின் டெல் அவிவில் இருந்து 286 இந்திய பயணிகள் மற்றும் 18 நேபாள நாட்டு மக்களுடன் ஐந்தாவது விமானம் இந்தியாவுக்கு வந்தடைந்தது. அதில் வந்த பயணிகளை மத்திய மந்திரி எல்.முருகன் வரவேற்றார்.