மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க ஒப்புதல்
1 min read
Approval to give Diwali bonus to central government employees
18.10.2023
மத்திய அரசு ஊழியர்களுக்குத் தீபாவளி போனஸ் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி போனஸ்
தீபாவளிக்கு ஒரு மாதத்திற்குக் குறைவான நாட்களே இருக்கும் நிலையில், தீபாவளி போனஸ் குறித்த அறிவிப்பு எப்போது வரும் என மத்திய அரசு ஊழியர்கள் ஆவலாகக் காத்திருந்தனர். இதற்கிடையே இது தொடர்பான முக்கிய அறிவிப்பு இப்போது வெளியாகியுள்ளது.
அதன்படி மத்திய அரசு ஊழியர்களுக்குத் தீபாவளி போனஸ் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ‘சி’ பிரிவு – கெசட் ரேங்க் இல்லாத ‘பி’ பிரிவு ஊழியர்களுக்குத் தீபாவளி போனஸ் வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
துணை ராணுவப் படைகளில் பணிபுரிவோருக்கும் தீபாவளி போனஸ் அளிக்க ஒப்புதல் தரப்பட்டுள்ளது. ஊழியர்களுக்கு அதிகபட்சமாக ரூ.7000 வரை போனஸ் அளிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. எந்தெந்த ஊழியர்களுக்கு எவ்வளவு போனஸ் கிடைக்கும் என்பது குறித்து மத்திய அரசு விரிவான அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது.