திருவனந்தபுரம் விமான நிலையத்தில் 23-ந் தேதி 5 மணி நேரம் விமான சேவை நிறுத்தம்-ஏன்?
1 min read
Flight service suspended for 5 hours at Thiruvananthapuram airport on 23rd-why?
18.10.2023
திருவனந்தபுரம் விமான நிலையத்தில் வருகிற 23-ந் தேதி 5 மணி நேரம் விமான சேவை நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
திருவனந்தபுரம் விமான நிலையம்
இந்தியாவில் எப்போதும் பரபரப்பாக செயல்படும் விமான நிலையங்களில் கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள விமான நிலையமும் ஒன்று. இந்த விமான நிலையத்தில் வருகிற 23-ந்தேதி (திங்கட்கிழமை) மாலை 4 மணி முதல் இரவு 9 வரை விமான சேவை நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவனந்தபுரத்தில் உள்ள ஸ்ரீபத்மநாபசுவாமி கோவிலின் அல்பாசி ஆராட்டு விழாவை முன்னிட்டு, இந்த விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளது.
பாரம்பரிய நிகழ்ச்சியாக அல்பாசி ஆராட்டு விழாவின்போது சாமி சிலை, ஷண்முகம் கடற்கரை கொண்டு செல்லப்பட்டு புனித நீராடல் நடத்தப்படும். விமான நிலையத்தின் ஓடுபாதை வழியாகத்தான் சாமி சிலை கொண்டு செல்லப்படும்.
விமான நிலையம் 1932-ம் ஆண்டு கட்டப்பட்டது. அதற்கு முன்னதாக பல நூற்றாண்டுகள் இந்த வழியாகத்தான் சாமி சிலை கொண்டு செல்லப்பட்டது. இதனால் வருடத்தில் இரண்டு நாட்கள் இந்த வழியாக, சாமி சிலையை கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டு வருகிறது.
இதனால் வருகிற 23-ந்தேதி மாலை 4 மணியில் இருந்து இரவு 9 மணி வரை விமான சேவை நிறத்தப்படுகிறது.